பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4539 அதைக்கு உண்மையான இனிய உயிர் இராமனே; அந்த உயிர் பயெகோலத் திருமேனியாய்ப் பொருகளத்தில் சாய்ந்து கிடக் விறது; உயிர் நீங்கிய உடல்போல் பரிதபித்து நின்ற சீதையை அசோகவனத்துக்கு அரக்கிகள் மீட்டிக் கொண்டு போனர் ஆதலால் பொய் உடல் கொண்டு செல்லும் நமன் தூதர் போன்றர் அன்ருர். தேவியின் ஆவிநிலை ஒவியமாய் உணர வந்தது. உடல் உலகில் கிடக்க உயிரைத்தான் எமதாதர் கொண்டு oபாவார்; அந்த இயற்கை நியதிக்கு மாருக உயிர் உலகத்து ஆக உடலக் கொண்டு போனர் ஆதலால் விதியையும் வலித்து அன்று வியப்புறக் குறித்து ஈண்டு விளைந்த நிலையை விளக்கினர்.

உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினர்

உணர்வு இறந்த கூற்றினரே.” (சடாயுகாண் படலம், 28) தன்னை உயிர் என்று பேணி வந்த தசரதன் இறந்து போ குனே எனச் சடாயு இப்படிப் புலம்பியிருக்கிருன். என்னைக் கொண்டு போகாமல் அந்த மன்னனைக் கொண்டு போனனே! அறிவு கெட்ட எமன் என்று பறவை வேந்தன் பரிந்து வருக்தி யுள்ளது இங்கே நன்கு அறிந்து கொள்ள வுரியது. விழுமிய நண்புரிமைகளும், உழுவலன்புகளும் ஒருங்கே உணர வந்தன. உயிர்ப் பண்புகள் ஒளிமிகுந்து திகழ்கின்றன. சமர பூமியில் வீழ்ந்து கிடக்கிற தனது பிரான நாயகன் பால் உள்ளமும் உயிரும் ஆழ்ந்து கிடக்க அலமந்து போன ைெத நிலை ஒன்றும் தெரியாமல் அசோக வனத்தில் நிலைகுலைந்து டெந்தாள். அவளது பரிதாபம் பெரிதாய் நீண்டு நின்றது. விபீடணன் மீண்டது. ■ *- வானர சேனைகளுக்குக் கனி காப் முதலிய உணவுகள் கொண்டு வரும் பொருட்டு வெளியே வெகுதூரம் போயிருந்த விபீடணன் கிறைந்த பொருள்களோடு மீண்டு வந்தான். கொண்டு வந்த பண்டங்களை யெல்லாம் பாசறையில் கிறைத்து விட்டுப் பொருகளத்தை அடைந்தான். நெடிய திகிலால் நெஞ் சம் கலங்கினன். படைகள் யாவும் மாண்டுமடிந்து கிடப்பதைக் கண்டு மறுகி நின்றன். அந்த மறுக்கம் உயிரைக் கலக்கிநின்றது.