பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4541 லெகளை இங்கே பார்த்து வருந்துகிருேம். ஊழிக்காலத்தில் உயி ரினங்கள் மாண்டது போல் சேனைகள் யாவும் ஒருங்கே செத் துக் கிடப்பதை நோக்கிச் சித்தம் கலங்கி விரைந்து பினங்களைக் கடந்து இரத்தச் சேற்றில் நடந்து இராமனே நாடித் தவித்து ஆவ லோடு வந்தான். அந்த வீர வள்ளல் இளவலோடு சாய்ந்து டெப்பதைக் கண்டான்; காணவே துயரத்தில் கோப்ந்து உயிர் ஒய்ந்து நின்ருன்; கண்ணிர் வெள்ளம் கடிது பாய்ந்து படியில் விழ்ந்தது. உழுவலன் பால் உருகி அழுதவன் பலவும் நினைந்தான். "ஆண்டவனுக்கு அபாயம் இல்லை; உடம்பில் சூடு உள்ளது; முகம் தெளிவாய்ப் பொலிந்து விளங்குகிறது; தம்பிக்கு நேர்ந் துள்ள அபாயத்தால் நம்பி சோகித்து விழ்ந்துள்ளான். தீய மாயாவியான இந்திரசித்தே இந்தத் இமையைச் செய்து போயி ருக்கிருன்; பிரமாஸ்திரத்தால் நேர்ந்த பெருங்கேடு இத; முன்பு நாகபாசம் நாசம் ஆனதுபோல் இந்த அழிதுயரும் விரைவில் ஒழிய வழி செய்ய வேண்டும்; தருமம் தலைகாக்கும்; கடவுளும் காத்தருளுவார்; கொடிய சேர்கள் அழிவது உறுதி; இனிய தரும சீலர் வெற்றிபெற்று மேன்மையோடு விளங்கி வாழ்வ தைக் காண விரைந்து வேணவாவோடு தெய்வங்கள் விரிந்து நிற்கின்றன. இந்த ஆபத்தை நீக்க வல்ல ஆற்றலுடையவன் அனுமான் ஒருவனே; அந்த அதிசய மேதை எங்கே? என்ன நிலையில் இருக்கிருனே? யாதும் தெரிய வில்லையே!” என்று இன்னவாறு பருவரலோடு மறுகி விரைந்து உருகி உளைந்து உரிமையோடு விபீடணன் தேட நேர்ந்தான். தன்னந் தனியனய் கின்று இன்னஅழந்து அவன் கவித்துப் பதைத்துத் துடித்துத் துளங்கியது கொடிய பரிதாபமாய் கெடிது ஓங்கி நின்றது. அவலத் துயர்களால் உயிர் அலமந்து அலைந்தது. உளைந்து உளைந்து உயிர்த்தான்; ஆவி உண்டு இலை என்ன ஒய்ந்தான். அவன் அடைந்த வேதனை நிலைகளை இது விளக்கியது. படைகள் பாடழிந்துள்ள நிலையைப் பார்த்ததும் விபீட ணன் இவ்வாறு பரிதபித்திருக்கிருன். துயரத் தீயால் உள்ளம் காய்ந்து உயிர் கரைந்திருக்கிறது. நேர்ந்திருக்கும் அழிவு நெடுங் திகிலாப் நெஞ்சைக் கலக்கவே நிலை குலைந்து, அலமந்திருக்கி முன். உயிர் துயரமாய் ஊசலாடிஓடி உளைந்துஉய்தி காடியுளது.