பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4542 கம்பன் கலை நிலை அன்பின் நிலை. இராமன்பால் வீடணன் கொண்டுள்ள அன்பு அளவிட லரியது. அதிசயமுடையது. தாய் தந்தை மனைவி மக்கள் ஒக்கல் என இன்னவாறு பிறப்போடு நெருங்கிய தொடர்புடையாரே ஒருவர்பால் ஒருவர் பிரியம் மீதுார்ந்து அன்பு புரிந்து வருவர். இயல்பான இந்த நிலையினைக் கடந்து ஈண்டு அன்பு நீண்டு பெருகி எவரும் வியந்து புகழ்ந்து போற்றும்படி உயர்ந்துளது. பிறப்பாலும், இருப்பாலும், கிலேயாலும் விபீடணன் இராம ைேடு வேறுபட்டவன்; அவ்வாறு மாறுபாடு மருவியிருந்தும் உள்ளம் உருகி உயிர் மறுகி எல்லையில்லாத அன்பு அவன்பால் ஒல்லையில் ஓங்கிஉரிமை மீதுார்ந்துபெருமையாய் உயர்ந்து நின்றது. இன்குர்பால் இன்னுருக்கு இன்ன கெயில் அன்பு உன் டாம் என என்ன வகையிலும் யாரும் முன்னதாக அறிய முடி யாது என்பார் அன்பின் தன்மை அமரரும் அறிந்தது அன்று என் ருர். அத்தகைய அதிசய அன்பு இங்கே பொங்கிவந்துள்ளது. ஒத்த பண்பும் உரிய நண்பும் உயிர்க்கிழமையும் ஒருமுக மாப் மருவியபொழுது அங்கே உத்தமமான அன்பு பெருகி, வருகிறது. அது மருவிவரும் அளவு மனிதன் மகிமை பெறுகி முன். இனிய அன்பு புரியவே அரிய மனிதப் பிறவி வந்திருக் கிறது. அந்தப் பிறவிப் பேறு ஈண்டு உறவாய் ஒங்கியுள்ளது. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. (குறள், 73) அரிய உயிர் மனித உடலை மருவி வந்ததற்குப் பயன் சிறிய பிராணிகளிடமும் உரிமையோடு அன்பு செய்வதேயாம் எனத் தேவர் இங்கனம் அருளியிருக்கிருர் என்பு என்றது உடம்பை. உயிர் உணர்வுடையதாயினும் தனியே நின்று அன்பு செய்ய முடியாது; உடம்போடு கூடிய பின்புதான் அது செய்ய (Քւջயும். ஆகவே அப்பிறப்பும் அதன் சிறப்பும் அறிய வந்தன. உடலும் உயிரும் ஒன்ருய்க் கூடிய கூட்டத்துக்கு உரிமை யான தேட்டம் அன்பின் ஈட்டமே என்றதனால் அதன் மகி மையை நன்கு தெரியலாம். அன்பு பெருகிவர உயிர் இன்ப நிலை யமாப் உயர்ந்து வருகிறது. உயிர்க்கு இனிய ஊதியமான