பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4543 அன்பை அடைந்து கொள்ளாதபோது அந்தப் பிறவி பயன் அற்றதாய்ப் பாழ்படுகின்றது. உடம்புக்கு என்பு போல் உயிர்க்கு அன்பு உறுதியாயுள்ளது. என்பு இல்லாத உடம்பு வலி இழந்து புழுவின் கூடாப் இழிவுறுதல்போல் அன்பு இல் லாக உயிர் உறுதி நலனை இழந்து சிறுமையாய் அழிவுறுகின்றது. அரிய உயிரின் பெரிய பயனை அன்பு இங்கே விடண னிடம் அதிசயநிலையில் பெருகியிருத்தலால் அது துதிசெய்ய வங் தது. என்பும் கரைய எங்கித் தவித்துத் துன்பத்தால் துடித்து நின்றவன் பின்பு அடுத்து நினைந்து ஆவதை நன்கு ஆராய்ந்தான். பிரமாஸ்திரத்தால் நேர்ந்த பெருங்கேடு என்று தெரிந்து கொண்டமையால் அதனை விரைந்து நீக்கவேண்டும் என விழை ந்து நாடினன். தனது ஆண்டவன் மாண்டவன் போல் மறுகிக் கிடப்பது நீண்ட துயரமாய் கின்ருலும் அது தீர வேண்டிய உபாயங்களை மனவுறுதியோடு துணிந்து செய்ய மூண்டான். வெய்ய சேன் போர் வெல்வது உண்டோ? வென்று போன இந்திர சித்தைக் குறித்து விடணன், இவ் வாறு கன்றிக் கறுத்து வெறுத்து மொழிந்துள்ளான். நேரே நின்று வென்றிருக்க முடியாது; மாய வஞ்சகமாகவே இந்தத் யே நாச வேலையை நீசத்தனமாச் செய்து போயிருக்கிருன் என்று வைது பழித்திருத்தலால் மனக்கொதிப்பு சினத்தியாய்ச் சிறி வந்தது. நீசன் என்று கிட்டுரமாக அவனை ஏசியிருக்கிருன். ஈசன் என்று உழுவலன்போடு தான் தொழுது துதித்து வரும் இராமன் முதலாயினேர் அழிதுயருறும்படி பழி வேலை யைச் செய்து விரைந்து மறைந்து போயிருத்தலால் மேகநாதனை இப்படி வேகமாக இவன் பழித்துப் பேசினன். புலையர் என்று அரக்கரைத் திரிசடை முன்னம் குறித்தாள். நீசன் என்று இந்திரசித்தை வீடணன் இங்கே வெறுத்தான். தாம் பிறந்த இனம் புலைத்தீமையுடையது என்ற அதனை அறவே வெறுத்து விலகிக் கரும நீதிகளோடு தோய்ந்து தங்கையும் மக ளும் சிங்தை தெளிந்துள்ள உண்மையை அவருடைய தாய வாய்மொழிகள் இடங்கள் தோறும் நன்கு உணர்த்தியுள்ளன.