பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4544 கம்பன் கலை நிலை மூண்டுள்ள நிலைமையை நினைந்து மறுகி நீண்ட துயரோடு நிலை குலைந்து நின்றவன் அபாயங்களை நீக்க வேண்டிய உபாயங்களை ஒர்ந்து துணிந்தான். அனுமானேக்கண்டு ஆகவேண்டியதைக் செய்யவேண்டும் என்று மூண்டமையால் அவனைத் தேடத் தொடங்கினன். கரிய கொடிய இருளில் தீப்பந்தம் ஒன்றைக் கையில் கொண்டு போர்க்களத்தில் அவன் துருவித் தேடியது பரி காபமாயிருந்தது. திரள் திரளாய்க் குவிந்து கிடக்கும் பிணங் களைக் கடந்து பேராவலோடு மாருதியை நாடி வருங்கால் ஓரி | - # # ■ 郵 * டத்தில் யானைகள் மாண்டு மடிந்துள்ள நீண்ட குவியலைக் கண் டான். அதன் இடையே அனுமான் சாய்ந்து கிடப்பதை நோக்கி விரை ந்து வந்து வெப்துயிர்த்து வெந்துயரோடு கொந்தான். o அனுமான் கிடந்த நிலை. வாய்மடுத்து இரண்டு கையும் முறுக்கித்தன் வயிரச் செங்கண் தியுகக் கனகக் குன்றில் திரண்டதோள் மழையைத் திண்ட ஆயிர கோடி யாசீனப் பெரும்பினத்து அமளி மேலான் காய்சினத்து அதுமன் என்னும் கடல் கடந்தானேக் கண்டான். f வீடணன் அழுது புரிந்தது. o கண்டுதன் கண்களுடு மழைஎனக் கலுழி வார உண்டுயிர் என்ப துன்னி உடல்கண ஒன்று ஒன்ருக விண்டுதிர் புண்ணினின்று மெல்லென விரைவின் வாங்கிக் கொண்டல்ரீர் கொணர்ந்து கோல முகத்தினேக் குளிரச் செய்தான். - is களைப்பு நீங்கி விழித்தது. உயிர்ப்புமுன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி வியர்ப்புள தாகக் கண்கள் விழித்தன மேனி மெல்லப் பெயர்த்து வாய் புனல்வந்து ஊற விக்கலும் பிறந்த தாக அயர்த்திலன் இராமன்காமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார். இராமனை கினைந்தது. அழுகையோடு உவகை யுற்ற வீடணன் ஆர்வம் கூரத் தழுவினன் அவனேத் தானும் அன்பொடு தழுவித் தக்கோய் வழுவிலன் அன்றே வள்ளல்? என்றனன் வலியன் என்ருன் தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயான். " * சேர்ந்துள்ள அழிவு நிலைகளை நோக்கி உழுவலன்பால் உருகி மறுகிய விபீடணன் அபாயத்தை நீக்கும் உபாயத்தை நாடி