பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,545 அனுமானத் தேடியதும், அவன் வீழ்ந்து கிடந்த இடத்தை அடைந்ததும், ஆழ்ந்த துயரத்தோடு - அலமந்து நொந்ததும், குளிர்ந்த நீரை விரைந்து கொணர்ந்து முகத்தில் தெளித்து அவ னது களைப்பை நீக்கியதும், மயங்கிக் கிடந்த அவன் மயக்கம் ர்ேந்து எழுந்ததும், உயிர்ப்பு வந்து எழும்பொழுதே இராம ாமத்தை அவன் மொழிந்து கொண்டிருந்ததும், 'ஆண்டவன் சேமமா? யாண்டுள்ளான்? நிலைஎப்படி?” என்று பேராவலோடு விடணனிடம் வினவியதும், அவன் பதில் உரைத்ததும், அதைக் கேட்டதும் இவ்விரன் விழிநீர் சொரிந்து திசைநோக்கித் தொழு ததும் அதிசய பத்தியின் விழுமிய ஒளிகளாய் விளங்கியுள்ளன. பேரன்பும் பெரு விரமும் யாரும் அளவிடலரிய நிலையில் அனுமானிடம் அமைந்திருத்தலை நேரே காட்சியாலும் அனுமான அளவையாலும் அறிந்துகொள்கிருேம். போர் வெறியோடு புரண்டு வீழ்ந்திருத்தலால் உருவத் தோற்றம் உக்கிரவீர நிலையில் ஓங்கி நின்றது. மெய்ப்பாடுகள் வீரப்பாடுகளாப் விரிந்துள்ளன. வாய்மடுத்துக் கைமுறுக்கி வயிரச் செங்கண் தீயுக. என்ற கல்ை அவன் சாய்ந்து கிடந்துள்ள நிலையை ஆய்ந்து கொள்ளலாம். சினமும் சீற்றமும் மானக் கொதிப்பும் விரத் துடிப்பும் மருவி நின்ற நிலைகள் தெரிய வந்தன. மாய வஞ்ச மாய் நேர்ந்த தீய அபாயத்தில் இத்துளயவனுடைய விரத்திறல் கள் யாதும் எதிராற்றமுடியாமல் போனமையால் மனக்கடுப் பும் சினத் துடிப்பும் காயத்தில் அடங்கிக் கதித்து கின்றன. இந்திரசித்தோடு தொடர்ந்து வந்த சேனைத்திரள்களுள் யானைத் திரளைத் தனித்து கின்று இவன் சிதைத்து அழித்தான். உக்கிர விரமாய் யாண்டும் பாய்ந்து வயிரத் தண்டால் இவ் விரன் மூண்டு அடித்து வரவே அவை யாவும் மாண்டு மடிந்தன. விருேடு வெறிகொண்டு வந்த யானைகளையெல்லாம் கொன்று குவித்து வென்றி விருேடு நின்ற பொழுது பிரமாஸ்திாம் வேக மாய்ப் பாய்ந்தது ஆதலால் அந்த இடத்திலேயே சாய்ந்து வீழ்க் தான். விழுந்து கிடந்த நிலையால் விரத்திறல் தெளிய நேர்ந்தது. ஆயிரகோடி யானைப் பெரும்பிணத்து அமளிமேலான். என்றது அனுமானது வெற்றி வீரத்தையும் வீழ்ந்து கிடந்த 569