பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4548 கம்பன் கலை நிலை அனுமான் ஆண்டு உயிர்த்து எழும்போது சொன்ன காமன் தையே இவர் ஈண்டு உயிர் மயங்கி விழும்போது சொல்லியிருள் கிருர். மனதில் நன்கு பதிந்திருந்தது வெளியேதெளிவாய்வந்தது. உயிர்க்கு ஊதியமான குறிக்கோளோடு உறுதியாகப் பயின்று வருவதே எவ்வழியும் செவ்வையாய் உரையில் உரு வேறி வருகிறது. அம்பால் அடிபட்டு அனுமான் கீழே விழும் பொழுது ராமா என்று சொல்லி விழுந்தான் ஆதலால் எழும் பொழுது அந்த வாசனையோடு காமம் காவில் மேவிவர நேர்ந்தது. நமச்சிவாய என்னும் மந்திரத்தை அப்பர் எப்போதும் செபித்து வந்திருக்கிருர். அதல்ை அல்லல் பல நீங்கி நல்ல சுகம் கண்டுள்ளார். அந்த உண்மையை அவருடைய வாய்மொழிகள் எவரும் தெளிவாயறியத் தாய்மையாய் அறிவித்துள்ளன. இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கிற்பி ரானென் று வினவுவோம் அல்லோம்; அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. (1) மாப்பினே தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பினே திருந்தடி பொருந்தக் கைதொழ காப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே. (தேவாரம்) என்ன துன்பங்கள் நேர்ந்தாலும் சமச்சிவாய என்னும் காமம் அவற்றை விரைந்து நீக்கி நன்மை புரிந்தருளும் என அப் பர் இப்படிக் குறித்திருக்கிருர், இந்த நாம செபத்தை இராம லிங்க சுவாமிகள் கனவிலும் மறவாமல் கருதிப் பேணி வந்துள் ளார். அதனை உறுதியாகப்பற்றி அவர் ஒழுகி வந்துள்ள நிலையை அயலே வரும் கவியால் சுவையாக் காட்டியிருக்கிருர். பெற்றதாய்தனே மகமறந்தாலும்பிள்ளையைப்பெறுந்தாய்மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரைமேவிய உடல்மறந்தாலும் கற்றநெஞ்சகம் கலைமறந்தாலும் கண்கள்கின்றிமைப்பது மறந்தாலும் கற்றவத்தவர் உள்ளிருந்து ஒங்கும் சமச்சிவாயத்தை நான்மறவேனே. (அருட்பா) சிவநாமத்தை இராமலிங்க அடிகள் செபித்து வந்துள்ள நிலையை இதல்ை அறிந்து கொள்கிருேம். இவ்வாறு இராமா