பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4550 கம்பன் கலை நிலை அனுமன்: ஆண்ட்வன் எங்கே? என்ன நிலையில் இருக்கிருர்? விடணன்: பெருமான் திருமேனியில் யாதொரு பிழையும் இல்லை; இளவலின் துயரைக் கண்டு உயிர் மயங்கி யுள்ளார். நாம் விரைந்து வேலை செய்ய வேண்டும். அனுமன்: சாம்பவனைப் பார்த்தீர்களா? அந்த மதிமானக் கண்டபோதுதான் சாம் கதி கண்டவராவோம். வீடணன்: அவரை நான் பார்க்கவில்லை. எங்கே கிடக்கிருரோ? யாதும் அறியேன்; பாவம் மிகவும்முதிய வயதினர். அனுமன்: முதியவராயினும் அதிசயநிலையினர். சாவு அவர்க்கு இல்லை; யாவும் அவராலேயே முடியும்; அவரை அடைந்த பின்னரே நாம் ஆற்ற வேண்டியவை களைக் குறித்து ஆலோசனைகள் செய்யவேண்டும். விடணன்: அவர் யாண்டுள்ளாரோ? தெரியவில்லையே! அனுமன்: போர் மூண்டபொழுது கீழ்த்திசையில் நம் சேனை களுக்குத் தலைமை பூண்டு நின்ருர். ஆண்டுப்போப் பார்ப்போம். அதன்பின் ஆவன கவனிப்போம். வீடணன்: நல்லது; விரைந்து போவோம். சாம்பவனை அடைந்தது. இவ்வாறு பேசி முடிந்த பின் இருவரும் பொருகளத்தில் பருவரலோடு தேடிப்போனர். பிணக்குவியல்கள் பலவும் கடந்து குறித்த இடத்தை நாடிச்சென்ருர். துணர வரும்போதே இருவரு டைய காலடிச் சத்தம் சாம்பவானுடைய காதில் விழுந்தது. உடல் முழுதும் பானங்கள் பாய்ந்து போனமையால் உதிரம் தோய்ந்து உயிர் மயங்கிச் செயலிழந்து கிடந்த அந்த முதியவன் அருகே வருகின்ற அடிச்சுவட்டைக் கருதி ஒர்ந்து மறுகி ஆப்ர் தான்: வருகின்றவர் யார்? எதிரிகளா யிருப்பாரோ? கொடிய அரக்கர்கள் மீண்டும் மூண்டுவந்து கொல்ல நீண்டு திரிகின்ற னரோ?” என்று உள்ளம் உளைந்தான். வெற்றிக் களிப்போடு போன கிருதர் மறுபடியும் வருதல் அரிது; வருவது யாரோ தெரியவில்லை என இன்னவாறு பலவும் கருதி அல்மலாடைம் தான். பலவகை வேதனைகளால் நோதலுழந்து சொந்தான்.