பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4552 கம்பன் கலை நிலை தெரிந்து மனம் மகிழ்ந்து நேர்ந்துள்ள அபாயத்தை நீக்க உபா யத்தை நாடி உரையாடி யிருக்கிருன். அவனுடைய மனவுறுதி யும் மதி கிலையும் உரையாடலும் அதிசய சாதுரியங்கள் கோய்க் துள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து தெளிந்திருக்கிருன். இங்கே நேர்ந்து வந்துள்ள கவிகளை நன்கு ஆய்ந்து நோக்கி ஒர்ந்து உணர்பவர் ஆர்க்க மானச மருமங்களைத் தேர்ந்துகொள் வர். நிகழ்ச்சிகளை நேரே தெளிவாக்கி மொழிகள் உணர்வின் ஒளிகளாய் ஒங்கி வினையாண்மைகளை விளக்கி மிளிர்கின்றன. முதியவன் மதிநிலை. சாம்பவன் நல்ல மதிமான், மனவுறுதி யுடையவன்; உலக நிலைகள் பலவும் தெரிந்தவன்; முதிர்க்க வயதினன்; அமைதியும் ஆழ்ந்த ஆலோசனையும் வாய்ந்தவன். பொருகளத்தில் மூண்ட துயரத்தால் உயிர் மயங்கிக் கிடந்தான்; கண்ணைத் திறக்க முடிய வில்லையே தவிர உணர்ச்சியிருந்தது. கிழவன் ஆயினும் அளவிட லரிய ஆற்றல் அமைந்தவன் ஆதலால் எதிரி செய்த நாச வேலை யை கினைந்து நெஞ்சம் கொதித்து கெடிது கடுத்திருந்தான். எரிகின்றமூப்பு, ஏவுண்டகோவு, அரிகின்றதுயரம். என்றது அவனது உடல் நிலை அடல்வலி முதலிய துயரநிலைகளைத் தொடர்ந்து உணர்ந்துகொள்ள வந்தது. கூரிய பானங்கள் வேகமாய்ப் பாய்ந்து உடலைத் துளைத்திருத்தலால் ரண வேதனை யோடு உயிர் மயங்கி யிருக்கிருன். எவு = அம்பு. எய்வது, ஏவி விடுவது என்னும் எதுவான் வந்தது. அம்புகள் பாய்ந்து ஊடு ருவியுள்ளமையால் அடலாண்மை தேய்ந்து அலமந்து கிடக் தான். அந்த நிலையிலும் அயலே வந்தவரது அடி ஒசையைக் கூர் ந்து ஒர்ந்து கொண்டான். செவியுணர்வு செவ்வையாய் நின்றது. வருகின்ற சுவட்டை ஒர்ந்தான் செவிகளால். தன்னை நாடி வருகின்ற அந்த இருவருடைய நடையின் ஒலியைச் சாம்பவன் காதுகளால் அறிந்து கொண்ட நிலையை இதனுல் நாம் தெரிந்துகொள்கிருேம். கண்களைத் திறந்துபார்க்க முடியாமல் துயர் மிகுந்து உயிர் மயங்கிக் கிடக்கான் ஆதலால் செவிகளால் ஒர்ந்தான் என்ருர். அந்த நிலையில் கிடந்தவனக் கண்டதும் பரிதாபமாய் வந்து அருகே கின்றவர் உருகி அழுதார்.