பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4556 கம்பன் கலை நிலை அன்னதுகண்டு உசாவுதலும் தொன்முனிவர் அவற்றியல் எற்கு அறிவித்தாரால். (2) இம்மருந்து காத்துறைவர் எண்ணிலவால் o தெய்வங்கள் இரங்கா யார்க்கும் நெய்ம்மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும்அவற் றுடனே கிற்கும் பொய்ம்மருங்கும் இல்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கிக் கைம்மருங்கு தொடர்ந்துன்னேக் காவாய் என்று அப்புறம்போய்க் காக்கும் என்ருன். (3) அம்புத மருந்துகள் இருக்கும் அதிசய நிலையைச் சாம்ப வன் இவ்வாறு உரைத்திருக்கிருன். திருமால் வாமனராய் வந்து மாவலி மன்னனிடம் மூன்றடி மண்கேட்டு மாநிலத்தைக் கவர்ந்துகொண்டபோது அந்த நிலைமையை உலகம் அறியப் பறைசாற்றிச் சாம்பவன் உணர்த்தியிருக்கிருன். உலகை வலம் வந்த அப்பொழுது இந்த மருந்து நிலையைக் கண்டு வியந்து தேவர்களிடம் விசாரித்து யாவும் தெரிந்துகொண்டதாகக் கூறி யிருத்தலால் சிரஞ்சீவியாப் வாழுகின்ற இவனது நெடிய ஆயுளை யும் நித்திய நிலையையும் நாம் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம்.

வே அமிர்தமான இந்தச் சஞ்சீவிகளைத் தெய்வங்கள் பாதுகாத்து கிற்கின்றன; அதிசயமான ஒரு சக்கரமும் அங்கே உக்கிர வீரமாய் உலாவி நிற்கிறது. யாரும் அருகே செல்ல முடி பTது. சென்ருல் மாண்டுபடுவரே அன்றி மீண்டு வர முடியாது. சத்திய சீலமும் தரும நீர்மையும் உடைய நீ அங்கே துணிந்து போகலாம்; உன்னைக் கண்டால் அந்தத் தேவதைகள் உவந்து ஒதுங்கிக்கொள்ளும். உலகிற்கு உதவி புரிகிற பல உயிர்களும், தரும நீதி தோய்ந்த வீரமூர்த்திகளும் பிழைத்து வர நீ இழைத் துவருதலால் உனக்கு யாதொரு இடையூறும் அவை செய்யா, அயல் ஒதுங்கி நின்று ஆதரவே செய்யும். நீ விரைந்துபோய் அங்கேயுள்ள அந்த மருந்துகளைக் கொண்டுவந்தாலன்றி இங்கே இறந்து கிடக்கின்றவர்களை எழுப்ப முடியாத, ஒல்லையில் சென்று உதவி செய்தருள்; கால எல்லே கழிந்து போகலாகாது, மேலோன் ஆன நீ மேலான நிலைகளைச்சாலவும் தெளிந்து செல்!” என்று அப்பெரியவன் உரிமையோடு விரைவு படுத்தின்ை.