பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராம ன் o 4559 கடிது சுழனறு வெனறி விருேடு என்றும் நிற்பது GJTGRIT மருந்து நிலையின் அருமைப்பாடுகளை எல்லாம் அப்பெரியவன் பெருமை யாகக் கூறிவரினும் இவ்விரன் ஒரு சிறிதும் தளரவில்லை; மேலே செல்லவே விழைந்து உள்ளம் உவந்து ஊக்கி எழுந்தான். இவ லுடைய மனவுறுதியும் மதிநலனும் வியனிலையில் வி ள ங் கி கின்றன. வினையாண்மையில் விறுமண்டிவேகம் மூண்டுநீண்டது. அனுமான் துணிந்தது. அம்புகளால் அடிபட்டு ஆவி மயங்கி அலமந்து கிடந்தவன் விபீடணன் கேற்றத் தேறி எழுந்து வந்தான். மருந்து உள்ள தைச் சாம்பவன் சொல்லவே அல்லல் எல்லாம் மறைந்துபோ யின; உள்ளம் உவந்து துள்ளி கின்றது. தனது ஆண்டவனுக்கு வேண்டிய உதவியைச்செய்ய நேர்ந்ததே! என்று நீண்ட உவகை நெஞ்சில் மூண்டு நெடிது ஓங்கி நின்றது. நேர்ந்திருந்த துன்பங் கள் எல்லாம் இராமன்பால் கொண்டுள்ள அன்புரிமையால் இன்பங்கள் ஆயின. அதிசய ஆக்கம் துதிகொண்டு நின்றது. “Pains of love be sweeter far Than all other pleasures are.” (Dryden) 'அன்பால் அமைந்த துன்பங்கள் மற்ற இன்பங்கள் எல் லாவற்றினும் மிகவும் இனிமையாம்' என்னும் இது இங்கே அறியவுரியது. உரிமை மீதுளர்ந்து உறுதியோடு உதவி செய்தான். மெய்வருத்தம் பாராமல் கருமமே கண்ணுய் இம்மெய்யன் விரைந்து எழுந்தது தரும வீரமாய்த் தழைத்துகின்றது. தனக்கு யாதொரு இன்பமும் கருதாமல் தன்னைச் சார்ந்தவரது துன்பங் களே நீக்க இவ்விரன் மூண்டது அதிசய வினையாண்மையாய் நீண்டு விளங்கியது. கருமவிர்ம் தருமநீர்மையாய்த் துலங்கியது. இன்பம் விழையான் வினவிழைவான் தன்கேளிர் துன்பம் அடைத்துான்றும் அாண். -- (குறள், 615) தனது தேகசுகத்தை விரும்பாமல் கர்ரியத்தை விழைந்து நிற்பவன் கிளைகளின் துன்பங்களை நீக்கியருளும் இன்பத்துரண் என இது உணர்த்தியுள்ளது. மனிதனது வினையாண்மையை விளக்கி வந்துள்ள இந்தப் புனித மொழிக்கு இனிய ஒளியாய் அனுமான் ஈண்டு தனிஅமைந்துள்ளமை தகைமைதோய்ந்துளது.