பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4562 கம்பன் கலை நிலை -- அருவென்ருர் சிலர்சிலர்கள் அண்டத்துக் கப்புறகின்று உலகம் ஆக்கும் கருவென் ருர் சிலர்.சிலர்கள் காற்றென்ருர் சிலர்.சிலர்கள் கடலேத் தாவிச் செருவென்ருன் கிலேஒன்றும் தெரியகிலார் உலகனேத்தும் தெரியும் செல்வர். (7) சஞ்சீவி மருந்து கொண்டுவர விரைந்து இலங்கைப் போர்க்களத் திலிருந்து அனுமான் மேலே தாவி வான விதிவழியே வாயுவேக மும் நாண அதிசய வேகமாய்ப் போயிருக்கும் நிலைகளை மேலே வந்துள்ள கவிகள் தெளிவாக் காட்டியுள்ளன. காட்சிகளைக் கருதிக் கானுந்தோறும் மாருதியின் மாட்சிகளும் மகிமைகளும் வியப்புகளையும் விம்மிதங்களையும் நேரே விளைத்து வருகின்றன. வாலை முறுக்கி விதிர்த்துக் கைகளை நேரே நீட்டி வாயிதழை மடித்துக் காலை நிலத்தில் கடிது ஊன்றி மேலே உக்கிர வேக மாப் இவ்விரன் தாவியிருக்கிருன். அடலாண்மையோடு மூண்டு பாப்ந்த அந்தப் பாய்ச்சலில் உடல் நீண்டு நின்ற நிலைகளைக் கவி வரைந்து காட்டியிருக்கும் கர்ட்சி வியப்பை யூட்டி நிற்கிறது. ஆகாயத்தை நோக்கிப் பாய்ந்தபோது அங்கே பெரிய அதிர்ச்சி தோன்றியிருக்கிறது. இலங்கை துளங்கியது என்றகளுல் அந்த நில மண்டலம் முழுவதும் கிலே குலைந்துள்ள நிலை தெரியலாகும். தாவும்போது அருகே கின்று கண்ட விபீடணனும், சாம்ப வனும் அதிசய பரவசராப் மதிமயங்கி யிருக்கின்றனர். கண் இமைக்குமுன் விண்ணில் போயினன்; அதன்பின் உருவைச் சரி யாக் காண முடியவில்லை. வடதிசை நோக்கி அடலாண்மை யோடு சென்ருன். அந்த உடல் வேகத்தால் கடல் அலைகள் கொந்தளித்து அடலோடு யாண்டும் கடிது பாய்ந்தன. கடல் பின்னே கிமிர்ந்து ஒடக் கால்முன்னே கடிது ஒட. என்றது அனுமான் வான வீதி வழியே மூண்டு போன பொழுது ஆண்டு ஆனபடியை ஆய்ந்து காணவந்தது. யுகாந்து காலத்தில் தோன்றுகின்ற சண்டமாருதம்போல் அண்ட முகடு கள் எங்கனும் பேரொலிகள் மண்டி முழங்கி நின்றன. மேக மண்டலத்தை நீங்கி வாயுமண்டலத்தையும் கடந்து குரிய மண் டலத்தை அணுகி வீரிய வேகமாப் விரைந்து போனன். வான