பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4564 கம்பன் கலை நிலை டைய அதிசய வேகமாய்ப் போனவன் ஒருநாழிகைப் பொழு துள் மேருமலையைக் கடந்து மேலே தீரமாய் மேவிப் போனன். இமயகிரியின் உச்சியில் செல்லுங்கால் வட கீழ்த்திசையில் சோதிமயமாய் ஒளி விசியுள்ள கைலாச வாசனைக் கைகூப்பித் தொழுது கடிது போன்ை. அவ்வாறு அதிவேகத்தில் போகின் றவனை வியந்து நோக்கிய உமாதேவி இவன் யார்’ என்று ஈச னிடம் ஆசையோடு கேட்டாள். அப்பெருமான் அனுமானது கரும நிலைகளையும் உலகில் நிகழவுள்ள மருமங்களையும் கருமங்க ளையும் தேவியிடம் தெளிவாக விளக்கியருளினர். வடகுண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் தடவரை அதனே நோக்கித் தாமரைச் செங்கை கூப்பிப் படர்குவான் தன்னே அன்ன பரமனும் பரிவிற் பார்த்துத் தடிமுலே உமைக்குக் காட்டி வாயுவின் தனயன் என்ருன். (1, என்அவன் எழுந்த தன்மை என்று உலகீன் ருள் கேட்ப மன்னவன் இராமன் துாதன் மருந்தின்மேல் வந்தான் வஞ்சர் தென்னகர் இலங்கைத் தீமை தீர்ப்பது திண்ணம் சேர்ந்து கன்னுதல் நாமும் வெம்போர் காணுதும் நாளே என்ருன். (2) நாமயோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி ஏம கூடத்தின் உம்பர் எய்திகின்றிறுதி இல்லாக் காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான் நேமியின் விசையிற் செல்வான் கிடதத்தின் நெற்றியுற்ருன். (3) அத்தடங் கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் உத்தர குருவை யுற்ருன் ஒளியவன். கதிர்கள் ஊன்றிச் செத்திய இருளின் ருக்கி விளங்கிய செயலை நோக்கி வித்தகன் விடிந்த தென்ன முடிந்தது.என் வேகம் என்ருன். (4) காற்றிசை சுருங்கச் செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் மேற்றிசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு மாற்றினன் வடபால் தோன்றும் என்பதும் மறைகள் வல்லோ, சாற்றினர் என்னத் துன்பம் தணிந்தனன் தவத்தின் இருவரே தோன்றி என்றும் ஈறிலா ஆயுள் எய்தி ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகிப் பொருவரும் இன்பம் துய்த் துப் புண்ணியம் புரிந்தோர் வைகுப் திருவுரை கமல மன்ன காட்டையும் தெரியக் கண்டான். (0.