பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,566 கம்பன் கலை நிலை மருந்து கண்டது. நிடதம் முதலிய குலமலைகளையும், பல தீவுகளையும் கடந்து போனவன் இடையே சூரிய வெளிச்சத்தைக் கண்டான். காணவே கலங்கி வருந்தினன். விடியு முன்னரே சஞ்சீவி மருங் தைக் கொண்டுபோய் யாவரையும் பிழைக்கவைக்க வேண்டும் என்னும் ஆவலோடு செல்கின்ருன் ஆதலால் ஆகவனக் கண்ட தும் நோகல் உண்டாயது. இடநிலையை உணர்ந்து உடனே' தெளிந்தான். வேறு கண்டமான மறுபுலம் ஆதலால் எரி கதிர் தெரிய நேர்ந்தது; தென்புலம் இரவாகவே யிருக்கும் என்று உறுதி செய்துகொண்டு ஊக்கிப் போனன். உத்தர குரு பூமி யைக் கடந்து வித்தகமாய் மேலே விரைந்து போனவன் மருந்து மலையை அடைக்கான். சஞ்சீவி வாடையும் அந்தப் பூண்டுகளின் ஒளிகளும் தெரிந்தன; தெரியவே நேரே விரைந்து பாய்ந்து அம் மலைமேல் காவினன்; அது நிலைகுலைந்து நடுங்கியது; காவல் தெய் வங்கள் கதிகலங்கி விலகின; மீண்டும் விரைந்து நெருங்கி ே யாவன்? ஈண்டு ஏன் வங்காய்? விரைந்துசொல்! இன்றேல் இறங் துபடுவாய்!” என்று அடுத்து வளைந்து கடுத்துக்கேட்டன. கேட் கவே அந்த வனதேவதைகளை இனிது நோக்கி அனுமான் இதமா மொழிந்தான்: 'கான் இராமநாதனுடைய அடிமை; வானும்வைய மும் உய்யும்படி வானா ச்ேனைகள் கிருதர்களோடு போராடி வருங்கால் பொருகளத்தில் மாயவினையால் மாயநேர்ந்தன; அந்த விர உபகாரிகளை எழுப்பியருள இந்த மருங்தை நாடி ஈங்கு வங் தேன்; கரும நீதிகளின் பாங்கு தெரிந்த நீங்கள் உரிமையோடு அருள்புரிய வேண்டும்” என்று பொருள் பொதிந்த் உரைகளைச் சுவைகள் சுரங்து வர உரைத்தான். இந்த உரைகளைக் கேட்ட தும் அவை உணர்ந்து தெளிந்து உவந்து கின்று உதவி புரிந்தன. கடிய காப்பாய்க் கதித்து நின்ற சக்கரமும் ஒக்க விலகி ஒதுங்கி நின்றது. யாவும் இதம் புரிந்து நிற்கவே குறித்த மருந்து களை இவன் கூர்ந்து நாடினன். நான்கு வகை ஒடதிகளையும் ஈங்கு காடி கின்ருல் காலம் வீணே கழிந்துபோம் என்று கடிது விரைந்து அம்மலையையே அடியோடுபெயர்த்து எடுத்தான்; அவ் வாறு அகழ்ந்து எடுத்ததைக் கையில் ஏந்தி வானில் தாவினன்.