பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ சா மன் 4567 இந்த அதிசய விரனுடைய அற்புத ஆற்றலை வியந்து நோக்கி வனதேவதைகள் யாவும் மதிமயங்கி நின்றன. கனவேகமாப் இவன் ககன வட்டத்தில் ஓங்கி எழுந்து உயர்ந்து விரைந்தான். சஞ்சீவி நிலையைத் தன் நெஞ்சம் தெளியச்சொல்லி அடை யாளங்கள் பலவும் கூறி விடுத்த அம்முதியவனுடைய மதிமாண் பையும் அதி மேன்மையையும் நன்றியறிவோடு கினைந்து தொழுது ஒன்றிய அன்புடன் உவந்துவென்றி விருேடு மேலே விரைந்தான். புலவன் சொன்ன நற்குன்றம் கண்டான். , , , ,-- -* - சாம்பவானைப் புலவன் என்று இங்கே குறித்திருக்கிரு.ர். கலையறிவில் சிறந்தவன்; உலகியல் ఇజు ఆశిr நன்கு தெரிந்த வன்; பல தேச சரித்திரங்களையும் வரன்முறையே தெளிவாக அறிந்தவன்; கால கதிகளைக் கருதி ஒர்ந்தவன்; சாலவும் முதிர்ந்த வயதினன் ஆயினும் மேலான ஞாபக சத்திவாய்ந்தவன்; இன் னவாறு நன்னயமான அவனுடைய நிலைமைகளையெல்லாம் நன்கு தெளிந்துகொள்ளப் புலவன் என்னும் பேர் அவனுக்கு ஈண்டு உரிமையாய் வந்தது. உற்ற நாமம் உயர்வை உணர்த்தி நின்றது. பருவ முதிர்ச்சியால் மருவியுள்ள அறிவு நிலையைச் சஞ்சீவி யைக் குறித்து அவன் உரைத்து வந்த உரைகளால் உணர்ந்து கொள்கிருேம். உணர்ச்சிகள் உயர்ச்சிகளை விளக்கி யுள்ளன. “The man of wisdom is the man of years.” (Young) = "ஞானம் உள்ள மனிதன் வயது முதிர்ந்தவன்” என்னும் இது இங்கே அறியவுரியது. வயதில் இளையவன் ஆயினும் ஞானம் உடையவன் பெரிய கிழவனே எனப் பெருமதிப்புறு கின்ருன்; இயல்பாகவே முதியகிழவனை இவன் மதிநலமும் ஞானமும் உடையய்ை மருவி யிருத்தலால் இவனது பெருமை உயர் கிலையில் ஒளி வீசி உலகம் புகழ ஓங்கி நின்றது. மாருதி மருந்தோடு வந்தது. கருதி வந்த காரியம் கடிது முடிந்தது என்று பெரிதும் மகிழ்ந்து சஞ்சீவி மல்ையைக் கையில் தாங்கிக்கொண்டு அனு மான் வானவீதியில் வாவி எழுந்தான்; இந்த வீரனுடைய அதிசய வேகத்தை வியந்து அமர் யாவரும் துதிசெய்து கின்றனர்.