பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4569 கண்டு தெளிந்தது. நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன்புகழ் ஆக்கிய கிருதனும் அழுத கண்ணினர் அாக்கிய தலையினர் தொழுத கையினர் - ஏக்கமுற்று அருகிருந்து இரங்கு வார்களே. - (3) கருதி வினவியது. ஏவிய காரியம் இயற்றி எய்தினை நோவிலே கொல்லென நோக்கி விடணன் தாவரும் பெரும்புகழ்ச் சாம்பன் தன்னேயும் - ஆவி வந்தனே கொல் என்று அருளி னைரோ. ' (4) உயிர் மயங்கிக் கிடந்த இராமன் கண் விழித்து அருகே பார்த்தபோது இருவரும் பரிவோடு அழுது நின்றனர். அங் நிலையில் விபிடணனை முதலில் நோக்கி நீ போன காரியம் இனிது முடிந்ததா? சேனைகளுக்கு உ ண வு க ள் கொண்டு வந்தாயா?' என்று வினவி விட்டு அயலே நின்ற சாம்பவனைப் பார்த்து எப்படிப் பிழைத்து வந்தாய்? முதிய பருவத்தில் கொடிய துயரோடு மடிய நேர்ந்தாய்! விதியின் அருளால் எழுந்து வந்துள்ளாய்! உங்கள் இருவரையும் பார்த்தது எனக் குப் பெரிய ஆறுதலாய் உவகை கந்துள்ளது. நேர்ந்துள்ள அவ கேடுகளை நினைந்து என் நெஞ்சம் கெடிது வருந்துகிறது; முடிவு தெரியாமல் மறுகி உழலுகின்றது என்று பரிவோடு பகர்ந்தான். மூர்ச்சை தெளிந்ததும் பேசியுள்ள வார்த்தைகள் வீர வள்ளலுடைய உள்ளத்தையும் ஊன்றியுள்ள துயரத்தையும் வார்த்துக் காட்டியுள்ளன. விளிந்தவன்போல் தம்பிமேல் விழுந்து கிடந்தவன் விழிதிறந்து பார்த்தது எழில் விரிந்து கின்றது. அயல் இருந்தவரை அருள் புரிந்து நோக்கினன். புண்டரீ கத்துணை தருமம் பூத்தன. F -* இராமன் கண்விழித்த காட்சியை இது காட்டியுள்ளது. |இரண்டு தாமரை மலர்கள் ஒருங்கே மலர்ந்தனபோல் அந்த அழகிய விழிகள் மலர்ந்து மெல்ல மருங்கே பார்த்திருக்கின்றன. பார்வையின் நீர்மையும் நிலைமையும் சீர்மை தோய்ந்து சிறப்பு வாய்ந்து உலகப் பார்வைக்கு வந்து உயர்ந்த ஒளி வீசியுள்ளன. 572 -