பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4570 கம்பன் கலை நிலை - கருண சுரந்த கவின் கனிந்திருந்த விழுமிய கண்கள் புண்ணியம் மலர்ந்தது ப்ோல் கண்ணியமாய்ப் பொலிந்து விளங்கின் ஆக லால் தருமம் பூத்தன என்ருர் பரிவோடு பார்த்தவன் கரும மூர்த்தி என்பது தெரிய உரிய சீர்த்தி கோய்ந்து வந்தது. தாமரையை வண்டுகள் மொய்த்து வட்டமிடுதல் போல் இராமன் கண்கள் ஆகிய அழகிய தாமரையைப் பெண்கள் மனங்கள் என்னும் வண்டுகள் குழந்து திரியும் என்றது விழி யின் விழுமிய எழில் நிலையை விளக்கி நின்றது. அதிசய அழகில் ஈடுபட்டுத் தையலார் மையலாய் உழன்ருலும் இந்த ஐயன் யாதும் நெறி திறம்பாத ஏக தார விரதன் என்பார் உத்தமன் என்ருர். அயல் மாதரை மயலாய் விழையாத சித்த சுத்தியாள லுக்கே உத்தமன் என்னும் பெயர் உரிமையாய் அமைக் துள்ளது. அரிய சில நிலையை உரிய நாமம் உணர்த்தி நின்றது. "ஒராதே கொண்டு அகன்ருய் உத்தமர்ை தேவிதனைப் பாராயோ கின்னுடைய மார்பகலம் பட்டவெல்லாம்" == f . (இராவணன் வதை, 245). - இராவணன் இறந்து பட்டபோது மண்டோதரி இப்படிப் புலம்பி யுள்ளாள். உத்தமனர் என்று இராமனை இங்கே அவள்: பரிவோடு கூறியிருப்பது கருதி யுணரவுரியது. ஏகபத்தினி விரத னை அந்த உத்தமன் தேவியைப் பித்தேறி விரும்பின்தினலேயே உன் குடி அழிந்தது; குலம் ஒழிந்தது; நீயும் செத்தாய்! நானும் சாக நேர்ந்துள்ளேன்” என்று அந்த அரசி பரிதாபமாய்! வயிறெரிந்து கதறி அழுதிருத்தலால் இக் கோமகன் பால் அவள் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் தெரிய வந்தன. சிறந்த கற்புடையவள் ஆதலால் உயர்ந்த ஒழுக்கமுள்ள இந்த அம். புதனை.வியந்து துதித்தாள். கரும சீலனை யாரும் உரிமையோடு உவந்து போற்றுவர் என்பது, ஈண்டு இனிது உணர வந்தது. அரிய மானச தத்துவங்கள் இடங்கள்தோறும் . இடம். பெற்றுள்ளன. சரித நிகழ்ச்சியில் அதிசய மருமங்கள் மருவி வருகின்றன. சோக நிலையில் ஆவி அலமந்துள்ள பொழுதும் தமது காவிய நாயகனை நம் கவிஞர் பிரான் உரிமை மீதார்ந்து புகழ்ந்து வருவது உள்ளம் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க வுரியது.