பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4576 கம்பன் கலை நிலை உயிர் வாழ்ந்திருக்க வேண்டுமா? என்று உயிர் பதிைத்தத் தய ரில் ஆழ்ந்திருக்கிருன். இளையவன் பிரீவு அளவறு துயர மாயது. உயிர்த்துணை போப் விட்டது; எனது வாழ்வு முழுதும் பாழாயது; இனி நான் சாவதே இனிது என்று தனது முடிவை இக் கோமகன் முடிவாகக் கூறவே சாம்பவன் அடியில் விழுந்து நெடிது வணங்கினன். உள்ளம் தெளியும்படி உறுதி மொழிகள் கூறினன். அவனுடைய உரைகள் உயர் போதங்களாய் வந்தன. சாம்பவன் தேற்றியது. ஆண்டவா! உஒTது நிலைமையை உணராமல், பல பல பேசி யது மனித இயல் பின் மருமங்களை வீசியது. எடுத்த பிறவிக்கு இயையத் தன்னை மறந்து இன்னலுழந்து இன்னவாறு மறுகி நிற்பினும் உன்னே நான் ஒரளவு முன்னரே அறிந்துள்ளேன், மனித வுருவில் மருவிய தெய்வம் என்பது பரம ரகசியம் ஆதி லால் அதனை வெளியே பேசுவதும் நேரே சொல்லுவதும் பெரிய தவறு. அரிய ஞான யோகிகள் சிறிது தெரிந்துள்ளதை நானும் உணர்ந்துள்ளேன். மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப் பொருள் வில்லும் தாங்கிக் கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது” என்று வாலி அங்கதனுக்கு அன்று சொல்லி யருளிய அந்த மூல மந்திரத்தை என்றும் நினைந்து நினைத்து என் உள்ளம் உவந்து வருகிறது. மூண்டு புரிந்த கருமத்தில் இடையே இந்த இடையூறு தோன்றியுளது. இது பிரமாஸ்திரத்தால் நேர்ந்தது. சிருட்டி கருக்காவை அதி தேவதையாக வுடைய அது எவரை யும் கொன்று தொலைக்க வல்லது. தெய்வ நியதிகள் எவ்வழியும் பொய் படுவது இல்லை ஆதலால் அது செய்ய வேண்டியதைக் செய்து போயது; அதிலிருந்து உய்தி பெற நாம் செய்ய வேண் டியதை ஆராய்ந்து செய்யவேண்டும். அவ்வாறு செவ்வையாகக் செய்திருக்கிறது. அருந்திறலுடைய அனுமான் மரு ங் து கொண்டு வரப் போயிருக்கிருன். விரைந்து வந்து விடுவான். பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுள்ளான் அருந்துயர் முடிக்குறும் அளவில் ஆற்றலான் மருந்து இறைப் பொழுதினில் கொணரும் வாய்மொழி பொருந்தினன் வடதிசை கடிது போயினன். (1)