பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.78 கம்பன் கலை நிலை யது; தரும தேவதையும் தனது அருகே மருமமாய் மருவி கிற்: கும் பெருமை வாய்ந்தது; அத்தகைய அரிய சஞ்சீவியை உத்த மனை அனுமான் தொண்டு வரப் போயிருக்கிருன்; விரைவில் வந்தருளுவான்; நாம் கண்டு மகிழலாம்; என் ஐயனே! பாதும் ஐயுருமல் சிறிது நேரம் பொறுத்தருளுங்கள்; உற்ற துயரெல் லாம் ஒருங்கே நீங்கிப்போம்; வெற்றிக் களிப்போடு உவகையில் ஓங்கி நிற்போம்” என இன்னவாறு அப் பெரியவன் உரிமை யோடு உறுதி கூறவே நம் மன்னர் பெருமான் மனம் தேறிஞன். சன்றவன் இறப்பினும் ஆவி ஈயும். என்றது ஆண்டு வரவுரிய சஞ்சீவியின் அற்புத மகிமையை அறிய வந்தது. அகில வுலகங்களையும் படைத்தருளுகின்ற பிரம தேவன் மாண்டு படினும் விரைவில் மீண்டு வர உயிர் தருவது என அதன் உயர் தகைமையை இங்ங்னம் உறுதியாக உரைத் தது இராமன் உள்ளம் தேறிப் பொறுதியாக இருக்கவேண்டி. தனது தம்பியும் வானர சேனைகளும் விரைவில் உயிர்த்து எழும் என்று.இந் நம்பி நன்கு நம்பும்படி அந்தக் கிழவன் இப்படி, அளவு காட்டிக் 1. கெழுதகைமையோடு பேசியிருக்கிருன். அவ லுடைய வாய்மொழிகள் உறுதி கலங்களையும் உவகை நிலைகளை யும் உழுவலன்புகளையும் ஒருங்கே விளைத்து வந்தன. அம்புகள் பட்டு அலமந்து வீழ்ந்து கிடந்த அனுமான் இருவர் செய்த இதங்களால் அரிதின் எழுந்து அல்லல்களையெல் லாம் மறந்து பல்லாயிரம் யோசனைகளுக்கு அப்பாலுள்ள அரிய மருங்தைக் கொண்டுவர உரிமையோடு போயிருக்கிருன் .என் பதை அறிந்ததும் இராமனது உள்ளம் உருகியது; கண்களில் நீர் பெருகியது. கருமமே கண்ணுய்ச் சென்றிருக்கிற அருமை யை எண்ணி எண்ணிக் தனது புண்ணியமே அனுமன் உரு வாப் மருவி நின்று உரிமையாய் உதவி புரிந்து வருகிறது என உருகிய அன்போடு கருதி வியந்து இவ் விரன் உவந்திருந்தான். மாருதி போயிருப்பதால் யாரும் இனிது உய்வர் என்று தேறியிருந்தவன் மாறிச் சாம்பவனை நோக்கி அவன் போப் எவ்வளவு நேரம் இருக்கும்?' என்று கேட்டான். அந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்ல வாய் திறந்தபோது வட திசையிலிருந்து கெடிய பெரிய ஓசை ஓங்கி எழுந்தது. ஒசையைக்