பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 .இ ரா ம ன் 4581 கழன்றன. நெடுங்கனே கழன்ற புண்கடுத்து அழன்றன. குளிர்ந்தன. அங்கம் செங்கண்கள் சுழன்றன. உலகெலாம் தொழுத தொங்கலின் குழன்றெழு குஞ்சியான் உணர்வு கூடினன். [5] யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ்கடல்; தாவரும் பேரொலி செவியில் சார்தலும் தேவர்கள் வாழ்த்தொலி கேட்ட செங்களுன் யோகம்ங்ே கினன் என இளவல் ஓங்கின்ை. [4] ஓங்கிய தம்பியை உயிர்வந்து உள்ளுற - விங்கிய தோள்களால் தழுவி வெந்துயர் நீங்கினன் இராமனும் உலகில் கின்றில தீங்குள தேவரும் மறுக்கம் சிந்தினர். (5) சங்கு நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளைக் காண்கின்ருேம்; வியப் பும் விம்முகமும் அடைந்து உவப்பு மீக் கூர்கின்ருேம். மேலே நிற்கின்ற சஞ்சீவி மூலிகைகளில் கோய்ந்து வந்த காற்று கீழே எங்கும் பாய்ந்து வீசியது; வீசவே மாய்ந்து கிடந்த்வர் எல்லா ரும் ஒல்லையில்எழுந்தனர். யாண்டும் எல்லையில்லாதபெருமகிழ்ச்சி ஓங்கி நின்றது. எவரும் வியந்து அங்கு உவகை மீதுணர்ந்தனர். யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினன். இலக்குவன் எழுந்த நிலையை இது விளக்கி யுள்ளது. யாதொரு சிரமமும் இன்றி இயல்பாக விழித்து எழுந்தவனைப் போல் எழுந்து நின்றுள்ளான். அதிசயமாய் எழுந்த அந்த இனிய எழுச்சி நிலையைக் கவி சுவையாகத் துலக்கி யருளினர். உறங்கி விழித்தவனைப் போல எழுந்தான் என்று உரைத்தி ருக்கலாம்; அவ்வாறு உரைக்கவில்லை; உறக்கத்தில் உயிர் மயக் கத்தில் ஆழ்ந்திருக்கும். இலக்குவன் அம்பு பாய்ந்து கீழேசாயும் போது இராமனையே கருதி வீழ்ந்தான். அந்தச் சொரூபத் திலேயே உள்ளம் சொருகி யிருந்தது. யோகம் என்பது மனம் அசையாமல் ஆன்மாவில் அடங்கியிருப்பதேயாம். தனது ஆன்ம சொரூபத்தில் ஒருமையாய் மருவியிருந்த யோகி அந்த யோக நிலை நீங்கி வெளி முகமாய் விழித்து எழுந்தது போல் இலக்கு வன் எழுந்தான் ஆதலால் யோகம் நீங்கினன் என இளவல் ஓங் கினன் என்ருர். விழுந்த நிலையும் எழுந்த வகையும் ஒருங்கே தெரிய வந்தன. உண்மை நிலை ஊன்றி ஒர்ந்து உணர வுரியது. - - |