பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4582 கம்பன் கலை நிலை தம்பியை நம்பி தழுவியது. உயிர்த்து எழுந்த தம்பியை இராமன் விரைந்து பாய்ந்த ஆவலோடு தழுவிக் கொண்டான். அன்பு மீதுளர்ந்த ஆனந்தத் தால் கண்ணிர் பெருகி ஒட இளவலை மருவி உவகையில் ஓங்கி ன்ை. துன்பம் யாவும் நீங்கி எல்லாரும் இன்பம் ஓங்கிகின்றனர். அம்பு பட்ட தழும்புகள் கூட யாவும் தெரியாமையால் வானர வீரர்கள் யாவரும் பழமைபோல் உடல் வலி மண்டி அடல்கொண்டு நின்றனர். சஞ்சீவியின் அற்புத மகிமையை நினைந்து வியந்து அமரரும் உவந்து தமர்களோடு புகழ்ந்தனர். போர்க்களத்தில் முன்னர் இறந்துபட்ட அரக்கர் உடல் களையெல்லாம் வாரிக் கடலில் விசி எறிந்து விட்டனர் ஆதலால் அந்த கிருதர் குலம் ஒழியப் பிறர் எவரும் பிழைத்து எழுந்தனர். இராக்கதர்' இனத்துக்கு காச காலம் மூண்டுள்ளமையை மாண்ட அவ் வுடல்கள் ஆண்டு இல்லாமல் ஒழிந்ததே தெளி வாய் விளக்கி நின்றது. பொருகளம் எங்கும் யாதொரு புலையும் இல்லாமல் புதிய நிலையில் பொலிந்து அதிசயமாத் தோன்றியது. தன்னல் மாய்ந்து பட்ட சேனைகள் மருந்தால் எழுந்து கொள்ளவே பிரமாஸ்திரம் மின்னல் ஒளிபோல் மீண்டும் உருக் கொண்டு இராமனே வலமாய்ச் சூழ்ந்து எழுந்து மேலே விரைந்து விசி மறைந்து போயது. அதனைக் கண்டதும் யாவரும் அதிச யித்து இராமனது அம்புத மகிமையைப் புகழ்ந்து போற்றி உவந்து நின்றனர். அரிய பெரிய மருமம் ஈண்டு அறிய வந்தது. சுந்தர வில்லியைத் தொழுது சூழவந்து அந்தணன் படையும் கின்று அயர்ந்து போயது. என்றதல்ை இவ் வீர மூர்த்தியின் நிலைமை நீர்மைகளை கினைந்து தெளிந்து கொள்ளுகிருேம். உலகம் உய்யும்படி மனித உருவில் மருவி வந்த இப்புனிதன் அனுமான் செய்தருளிய ஆருயிர் உதவியைக் கருதிப் பேரன்பால் உருகினன். நேரே கண்டு மகிழ அவாவிஅருகே உரிமையாப் ஆய்ந்து நோக்கிஞ்ன். யாரும் எண்ண முடியாத அம்புக் சித்தியைச் செய்து எழுபது வெள்ளம் சேனைகளும் அழிந்து போகாதபடி பாது காத்து ஆருயிர் உதவி புரிந்த அனுமான் யாதொன்.றும் தெரியா