பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4584 கம்பன் கலை நிலை வைத்த பரம உபகாரி என்று அனுமான உவந்து இர ாமன் உள்ளம் உருகி யுள்ளது. அந்த உருக்கத்தால் அவனை அள்ளி, அனைத்து மார்போடு இறுகத் தழுவிப் பரிவு கூர்ந்துள்ளான். அன்பு மீதார்ந்த ஆர்வத்தால் ஆண்டவன் செய்வதை காணி அந்தப் பிடியிலிருந்து நழுவி அடியில் விழுந்து வணங்கிப் பணி வோடு பரிந்து நின்றது அம் மதிமானுடைய அடக்கத்தையும் அதிசய நீர்மையையும் தெளிவாக வெளிப்படுத்தி விளங்கியது. கரும வீரமும் கலை ஞானமும் நிலையான அன்பும் நெஞ்சு, மறுதியும் தரும நீதியும் கழைத்து ஓங்கியுள்ள அந்த அம்புக மேதையை அன்புரிமையோடு நோக்கி நன்றி மீதுணர்ந்து இவ் வென்றி விரன் விசய வுரைகள் கூறினன். அந்த வித்தக வசனங் கள் உய்த்து உணர்ந்து ஒர்ந்து சிந்திக்கத்தக்கன. o 'அனுமl என் முன்னேர்கள் மனுநீதி முறையே ஒழுகி வந்துள்ளனர். விழுமிய அந்தக் குலமரபில் நான் பிறந்தேன்; எனது பிரிவினல் நேர்ந்த பெரிய துயரால் என் தந்தை அரிய உயிரை இழந்தார். பிள்ளைக் காதலில் எல்லை மீறிப் பெருகியிருந்த அம் மன்னனுக்குப் புதல்வராய்ப் பிறந்திருந்தோம். இராமன், இலட்சுமணன் என்னும் பெயரோடு தசரதன் மக்களாய்த் தோன்றி நின்ற இருவரும் சிறிது நேரத்துக்கு முன் மாண்டு போயினேம்; இப்பொழுது மீண்டு உன்னல் உயிர் பெற்று எழுந்துள்ளோம்; ஆகவே இன்று முதல் நானும் என் கம்பியும் உன் பிள்ளைகளே, நீயே எமக்குக் கங்தை' என்று இந்தவாறு இராமன் அனுமான நோக்கி உரிமையோடு பேசி யிருக்கிருன். இந்தப் பேச்சுகள் எவ்வளவு காட்சிகளைக் கருதி எத்துணை மாட் சிகளோடு மருவி வந்துள்ளன! அன்புருக்கமும் நன்றி யுணர்ச்சியும் என்பை உருக்கியிருத்தலால் உரைகள் இவ்வாறு உயர் நிலையில் ஒடிவக்கன. நம்பிவாய்மொழிஅன்புவழியநின்றது. மன்னில் தோன்றினேம் முன்னம், மாண்டுளோம்; கின்னில் தோன்றினேம். அயோத்தி அரசன் பிள்ளைகளாய் முன்பு பிறந்தோம்; பொருகளத்தில் செத்துப் போனேம்; இப்பொழுது பிறந்திருக் கிருேம்; இந்தப்பிறப்பை நீ அருளிய்ை; ஆதலால் நீயே எங்கள்: