பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4586 கம்பன் கலை நிலை நெறியில் தோன்றி ய்ை! I என அனுமாரை இவ்வாறு இராமன் இங்கே விளித்திருக்கிருன்: கரும நெறியிலிருந்தே பிறந்தவன் என அவன் தோற்றக்கே ஏற்றமாக் குறித்தது இயல்பும் செயலும் கருதி. தங்கள் இ வரையும் தோற்றுவித்தவன் தோன்றியுள்ள நிலையை ஊன்றி உணர வுரைத்தான். நீதியும் நெறியும் ஈன்றருளிய ஒ மேதையே! உன்னிடமிருந்து தோன்றிய காங்கள் நீதிநெறி வழியே ஒழுகி விழுமிய நிலையில் வருவோம் என உறுதி கூறி ஒதிய படியாம்: பிறர் தினே அளவு உதவி செய்யினும் அதனைப் பனை அள வாகக் கருதி மேலோர் அவர் பால் நன்றி பர்ராட்டுவார். ே அரிய உயிரையே உதவியுள்ளாய்! உனக்கு (எவ்வாறு நன்றி செலுத்தி யார் கைம்மாறு செய்ய வல்லார்? நீதி மன்னராய் நிலவியிருந்த என் முன்னேர் செய்த புண்ணியமே, உன் உருவம் என்று நான் எண்ணி மகிழ்கின்றேன். பழியோடு அழிந்து போக இருக்க என்னைப் பாதுகாத்து விழுமிய மேன்மையை அருளியுள்ள நீ ஊழி காலமும் கரும விரகுப் இந்த நிலையில் வாழ வேண்டும் என்று ஆண்டவனே நான் வேண்டுகின்றேன். - பழியும் காத்து, அரும்பகையும் காத்து, எமை வழியும் காத்தனே மறையும் காத்தனே. அனுமான் பாதுகாத்திருக்கும் நிலைகளை இவ்வாறு தெளிவாகி விளக்கி இராமன் விழி நீர் பெருக்கி அளிபுரிந்திருக்கிருன். சஞ்சீவியை அனுமான் கொண்டு வராமல் இருந்தால் இலக்குவன் இறந்து போயிருப்பான்; இராமன் உயிர் வைத் திரான்; சீதை மாய்ந்து விடுவாள்; இராம சரிதமே விபரீதமாய் முடிந்திருக்கும்; அவ்வாறு அழி துயரும் பழி கேடும் நேராக படி அனுமான் பாதுகாத்து அருளின்ை ஆதலால் பழியும் காத்தனை என்ருன். பகைவர் வெற்றிக் களிப்பால் விஅறுகொள் ளாமல் விலக்கி அவர் யாவரும் நீறுபட்டு அழியும்படி தம்மை எழுப்பி யுள்ளமையை கினைந்து பகையும் காத்தன என்ருன் தியோரைத் தொலைத்து சல்லோரை வாழ்வித்த கரும விரன் என்று இராமனது குலமுறையை உலகம் வழிமுறையே போற்றி வரும்படி ஆற்றியுள்ளமையால் வழியும் காத்தனை என்ருன்.