பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4587 அரக்கரால் அவமாய்ப் பாழ்பட நேர்ந்த வேத ஒழுக்கங்களும் கரும திேகளும் அவ்வாறு பழுது படாதபடி பாது காத்தருளிய விழுமிய கரும வீரன் என்பது மறையும் காத்தனை என்ற தல்ை தெரிய வந்தது. தீமைகள் நீங்கி விடும்; நன்மைகள் ஓங்கி வரும்: பாண்டும் மனித சமுதாயம் இனிது வாழும் என அனுமானது உபகார நிலையால் விளையவுள்ள விழுமிய நிலைகளை விளக்கியுள் ளான். அவ் வுபகாரியின் உதவிகள் ஒளி வீசி மிளிர்கின்றன. எனக்கு நீ உயிருகவி புரிந்துள்ளாய்! அந்த உறுதி நிலையால் இனி நான் அரிய பல பெருமைகளை அடைந்து கொள்வேன்; து குலமும் புகழ் மிகுந்து விளங்கும் ଶjTଈ୪T இராமன் р GNU бло 55 மீதார்ந்து உருகியுள்ளமையை உரைகள் உணர்த்தி நிற்கின்றன. அழியும் கால் தரும் உதவி. என்றது அனுமான் செய்துள்ள உதவி நிலையை விழியூன்றி நோக்க வந்தது. உயிர்க்கேடு நேர்ந்த கொடிய அபாயகாலத்தில் அரிய உதவியைச் செய்து அழிதுயரை நீக்கி உயிரை அருளியுள் ளமையால் அந்த அரிய ஆதரவை கினைந்து இந்தக் கோமகன் உள்ளம் உருகி உரிமையோடு உரையாடி யிருக்கிருன் காலத்தி ஒல்செய்த நன்றி சிறிது.எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள், 102) அபாயம் நேர்ந்தபோது ஒருவன் சிறிது உபகாரம் செப் யினும் அது அகண்டமான உலகத்தினும் மிகவும் பெரிது ஆம் என்னும் இது இங்கே அறியவுரியது. இறுதி மூண்டகாலத்தில் அனு அளவு உதவினும் அது அண்டத்தை விடப் பெரிதாக நினைந்து பெரியோர் உள்ளம் உருகுவர்; ஈண்டு. மூண்ட மரணத் தில் செய்த உயிர் உதவி அண்டத்தினும் நீண்டது; எல்லை யில்லாதது; இதற்கு நான் எவ்வாறு நன்றி செலுத்த முடியும் என்று இவ்வென்றி விரன் நெஞ்சம் உருகி நெடிது வியந்துள்ள நிலையை உரைகளால் நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். -- "பொன் அணி மார்பன் முன்னர் ஆற்றிய நன்னர்க்கு உதவு பின் உபகாரம் அலைதிரைப் பெளவம் ஆடை ஆகிய - நிலமுழுது கொடுப்பினும் நேரோ?” (பெருங்கதை,8-20)