பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4589 சஞ்சீவியைக் கொண்டு வந்து தனக்கு உயிர் வாழ்வு அளித்தவனுக்குச் சிரஞ்சீவியான வாழ்வை இராமன் அருளி யிருக்கிருன். அந்த அருள் நிலை பொருள் பொதிந்து நின்றது. சற்பத் துறங்கும் அரங்கா! உன்பாதம் தனஅடைந்த கற்பத் தருக்கு ஒரு நாசம் உண்டோ? நலமாமருத்தின் வெற்பைக் கொணர்ந்த விறல்அனுமானும் அவ்விடணனும் கற்பத் தளவும் அழியா திருக்கவும் கற்பித்தையே. (1) வல்லார் முகலத்திருவின்பெருமான் விட்ட, வாகனம் போய்த் தொல்லாழி நீரைக் கடந்தது தாளின்; சுடர் இரண்டும் - செல்லாத ஊரைத் திரிபுரம் கண்டது; சேனே வெள்ளம் எல்லாம் உயக்கொண்டது மருந்தார்கிரி ஏந்தி வந்தே. (2) ... " = (திருவரங்கத்து மாலை 45, 91) மருந்து மலையைக் கொண்டுவந்து அனுமான் சேனைகளை துே ழுப்பியருளியதையும், சிரஞ்சீவி வாழ்வு பெற்றுள்ளதையும் இக் கவிகள் குறித்துள்ளன. அம்புத நிலையில் ஆருயிர் உதவி யுள்ளமையால் மாருதி மகிமையை யாவரும் துதி செய்யலாயி னர். அரிய வீரன்; பெரிய உபகாரி என்பது அறிய வந்தது. ఙuTజాలాTT வேந்தனை சுக்கிரீவனும், அங்கதன் முதலிய கலை வர்களும் தங்களுடைய குல தெய்வம் என்று அனுமான மனம் உவந்து புகழ்ந்தனர். சாம்பவன் இந்த ஆண்டகையைத் தனியே இனிது நோக்கிச் சஞ்சீவியைக் கொண்டுபோய் முன்னம் இருந்த இடத்தில் வைத்து வரவேண்டும் என்று வேண்டினன். அவ்வாறே விரைந்து அவன் கொண்டுபோக நேர்ந்தான். சாம்பவன் குறித்தது. o உய்த்தமா மருந்து உதவ ஒன்னலார் பொய்த்த சிந்தையார் இறுதல் பொய்க்குமால் மொய்த்த குன்றை அம் மூல ஆழின் வாய் வைத்து மீடியால் வரம்பில் ஆற்றலாய்! " |-- அனுமான் கொண்டு போனது. என்று சாம்பவன் இயம்ப ஈதரோ o' m நன்று சால என்று ஒன்று நாழிகை