பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4590 கம்பன் கலை நிலை சென்று மீள்வன் என்றுணர்ந்துதெய்வமாக் குன்று தாங்கிய குரிசில் போயின்ை. (மருத்துமலைப் படலம், 116, 117)

சஞ்சீவி அங்கே இருந்தால் அரக்கர் அழிந்து படினும் எழுந்து வர நேர்வர்; ஆதலால் அது இருத்தல் கூடாது; உரிய இடத்தில் கொண்டுபோய் அதனை வைத்து வருக” என்று சாம் பவன் சொல்லவே அனுமான் நல்லது என்று விரைந்தான்; கின்றபடியே இராமனை உவந்து தொழுது மேலே காவினன். ஒ "ஒT விதியில் குளிர் கருக்களோடு. அண்ட கோளம்போல் அமைந்து நின்ற அந்தத் தெய்வீக மலையை அனுமான் கையில் எந்தினன்; எங்கவே அது அசைந்து இரைந்தது; விரைந்து போனன். ஒரு நாழிகைக்குள் மீண்டு வந்து விடுவதாக உறுதி கூறிக் கருமமே கண்ணுய்க் கருதி இவ் விரன் போயிருப்பது காரிய வேகத்தையும் வீரிய விறலையும் விளக்கி நின்றது. o

- - - . தெய்வமாக் குன்று தாங்கிய குரிசில் போயின்ை. என்றது அந்த மருந்து மலையின் மாட்சியையும் இங்கப் பெருங் தகையின் மகிமையையும் ஒருங்கே உணர வந்தது. இறந்தாரை - எழுப்பியருளுகின்ற திவ்விய சஞ்சீவிகளை யுடைமையால் தெய்வ மாக் குன்று என்ருர். அரிய பல பெருமைகள் மருவியுள்ள அதிசய மேன்மையாளன் ஆதலால் அந்த வரிசைகள் யாவும் கருதியுணர அனுமான இங்கே குரிசில் என்று குறித்தார். கலை ஞானமும் கரும வீரமும் திரும சீலமும் அற்புத சித்தி களும் அனுமானிடம் களிநடம் புரிகின்றன. விஞ்ஞான முறை யிலும், மெய்ஞ்ஞான நிலையிலும் விரி சோதிகளை வீசி விதிபுரிந்து விளங்குகிருன். இவனுடைய செயல் இயல்கள் அதிசய நிலையின.

  • ஆகாய விமானம்.

மேல் நாட்டார் இக்காலத்தில் காட்டி வருகிற வானவூர்தி களை நாம் கண்டு வருகிருேம். ஒரு மணிக்கு எழுஅ அறு மைல் வேகத்தில் பறப்பது என வியப்பாகப் பேசி வருகின்றனர். 'பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த ப மலையைப் பெயர்த்து எடுத்து ஒல்லையில் வந்து உயிர் உதவி புரிந்து மீண்டும் விரைந்து கொண்டுபோயுள்ள அனுமானது அதிசய வேகத்தை