பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 459 Ꮮ யும், மதி விவேகத்தையும் அம்புத ஆற்றலையும் கருதி யுனரின் எல்லையில்லாத வியப்பை எவரும் அடைவர். பண்டைக் காலத் தில் இந்நாடு எத்தகைய உச்ச நிலையில் ஓங்கி யிருந்துள்ளது! என்பதை இந்த உத்தமன் செயல்களால் உய்த்துணர்ந்துகொள் ளலாம். இந்நாளில் தோன்றிய ஒரு வானவூர்திக்கு அனுமான் என ஆட்சியாளரும் பெயர் வைத்திருப்பது இவனது மாட்சியை ஒரளவு நினைவுறுத்தி வருகிறது; வரினும் பேரளவில் எவரும் பெருமை காண முடியாது; கரும நிலையில் அது மருமமாயுளது. இந்த மகா வீரனுடைய மன வுறுதியும் மதி நலனும் வினை மாட்சியும் மனித சமுதாயத்துக்குப் புனித போதனைகளைப் போதித்துப் புதிய உணர்ச்சி கலங்களை அருளி யிருக்கின்றன. கொடிய ப்ாணங்களால் அடிபட்டுப் போர்க்களத்தில் உயிர் மயங்கிக் கிடந்தவன் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும் எவ் வளவு அதிசய காரியங்களைச் செய்திருக்கிருன்! தனது உடல் நலிவை ஒரு சிறிதும் கருதாமல் அடலாண்மையோடு இராம லுக்கு ஆதரவு புரிந்திருக்கும் இவனுடைய அருமைப் பாடுகளைக் கருதியுணர்வார் எவரும் உள்ளம் உருகி உறுதி பெருகிவருவார். “He has not the least hesitation in sacrificing his life for the good of Rama. He had no care for life or death. Only the carrying out of Rama’s behest is the one vow of his life.” - * (Vivekananda) I a reبه ع நன்மைக்காகக் தனது உயிரை விடவும் அவன் உறுதி பூண்டுள்ளான்; சாவோ, வாழ்வோ அவற்றைக் குறித்து யாதும் க்ருதான். இராமனது கட்டளையை நிறைவேற்றி இதம் செய்வதையே தன் உயிர் வாழ்வின் குறிக்கோளாக் கருதி யுள்ளான்' என அனுமானக் குறித்து விவேகானந்தர் இவ்வாறு உரைத்துள்ளார். குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. இந்த உத்தம விரன் உத்தர திசையை நோக்கிப் போனதை வியந்து வானர வீரர்கள் யாவரும் வாழ்த்தி நின்றனர். சேனைத் திரளுள் புதிய எழுச்சிகள் அதிசய நிலைகளில் கலித்து நின்றன. எல்லாரும் இனிய விருந்துகள் அருந்தி உல்லாசமாயமர்ந்துஆறுத லடைந்திருக்கும்படி இராமபிரான் தேறுதல் புரிந்தருளின்ை. |