பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4594 கம்பன் கலை நிலை வஞ்சின் கள்ளுக்கும், பேதையர் அரக்கர்க்கும், மதிகேடு மது மயக்கத்துக்கும் ஒப்பாம். இயல்பாகவே விதிமுறை கெரி யாமல் மதி கெட்டிருந்தவர் குடி வெறியால் கெடிது மயங்கித் தலை கால் தெரியாமல் நிலை குலைந்து திரிந்தனர். அந்த நிலைமை இந்த வகையில் தொகையா வரைந்து காட்டப்பட்டது. நல்லோர் சொல்லை கயந்து கேளுங்கள்; உள்ளம் தெளிந்து கொள்ளுங்கள்; அறிவுத் தெளிவு பெரு மகிமையாம்; அவ்வாறு தெளியாதிருப்பின் இளி நிலைகளில் இழிந்துபட நேரும் என உலக மக்களுக்கு ஒர் உணர்வு நலனைக் கவி ஈண்டு உதவியிருக் கிறார். மதிநலம் விதிமுறை விரிந்து அதி நயமாய் வந்தது. | s இலங்கை வாசிகளுடைய களியாட்ட நிலைகளைக் கூறி வரும் போதே தெளிவான உறுதி நலனையும் உணர்த்தியருளினர். பொறி வெறி நீங்கி மனிதர் இனிய அறிவாளிகளாய்த் தெளி வடைந்து . உயர வேண்டும் என அளிபுரிந்து உரிமையோடு: உணர்த்தி யிருப்பது ஈண்டு ஊன்றி நோக்கி உணர வுரியது. - நாடு எங்கும் வெற்றிவிழா விரிந்து நின்றது. நகரம் களி: யாட்டங்களில் மூழ்கியிருந்தது. இனிய போகங்களை நுகர்ந்து தேவ மாதர்களின் நடனங்களைக் கண்டு களித்திருந்த இராவு ணன் போர்க்களத்திலிருந்து ஒலித்து எழுந்து வந்த பெரிய 洽 களைக் கேட்டு உள்ளம் திகைத்தான். அதிசயமான அழகிய மணி மண்டபத்தின் நடுவே அரியணையில் அமர்ந்திருந்தவன். வானர சேனைகளின் ஆரவாரங்களைக் கேட்கவே அர ம்பைவி புரிகின்ற அரிய கடனம் முதலிய இன்பக் காட்சிகளை யெல்லாம் யாதும் காணுமல் அயர்ந்து நாணி வியந்து மயங்கின்ை. முத்தன்மை மொழிய லாகா முகிழிள முறுவல் நல்லார் இத்தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லே . அத்தன்மெய் அரியின் சேனே ஆர்கலி ஆர்த்த ஒதை மத்தன்மெய் மயங்க வந்து செவிதொஅம் மடுத்த மாதோ. (1) ஆடலும் களியின் வந்த அமலேயும் அமிழ்தின் ஆன்ற பாடலும் முழவின் தெய்வப் பாணியும் பவள வாயார் 轟 ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலைவெவ் வுரையும் எல்லாம். வாடல்மென் மலரே ஒத்த ஆர்ப்பொலி வருத லோடும். o