பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4597 திக்கு என்ற மனத்தன் என்றதனல்அவன்.அங்கேஅடைந்த நெடுங் திகில் அறிந்துகொள்கிருேம். வெற்றி கிடைத்தது என்று மும் அறும் களித்திருந்தான் ஆதலால் உற்றதை உணரவே உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கியது. எள்ளல் இளிவுகள் அடர்ந்து தொடர விரைந்து எழுந்து போய்த் தனி இடத்தை அடைந்தான். உற்ற உறவினரும் உரிய மந்திரிகளும் அரிய ஆலோசனைக ளோடு அருகு வந்து சூழ்ந்தார். மாண்டுபோன எதிரிகள் மீண்டும் எழுந்துள்ளார்' என நீண்ட கவலையோடு இராவணன் நேரே கூறினன். அவ்வுரையைக் கேட்டதும் யாவரும் மறுகி நொந்தார். அவலக் கவலைகளால் அனைவரும் அலமரலடைந்தார். பாட்டன் பரிவுரை. பெரிய மதிமானும் உரிய முதியவனுமான மிாலியவான் அரசனை உரிமையோடு நோக்கி உரையாட நேர்ந்தான்: 'மன் னர் பெரும! நம் குலத்துக்கு நேர்ந்துள்ள அழிகேடுகளைச் சில காலமா நாம் தெளிவாய்த் தெரிந்து வருகிருேம். நாம் என்றும் கண்டறியாத பழி துயரங்களும் படு தோல்விகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அம்புக ஆற்றலுடைய பிர மாஸ் திரத்தால் இறந்துபட்ட படைகள் மீண்டும் எழுந்து வந்துள்ளன என்ருல் இது எவ்வளவு அதிசயம்! நமக்கு எதிரியாய் நேர்க் துள்ள இராமன் அதிசய வலியினன்; அவனுக்கு ஊழியம் புரி கின்ற அனுமான் ஊழித் தீயினும் ஊழிக் காற்றினும் விறலும் வேகமும் உடையனப் வீறுகொண்டு நிற்கின்ருன். அவனே அரிய சஞ்சீவியைக் கொண்டுவந்து அழிந்து பட்ட படைகளை யெல்லாம் எழுந்து வரும்படி செய்துள்ளான். அவனல் செய்ய முடியாத காரியம் யாதும் இல்லை;. வையத்தையும் வானத்தையும் கையில் எந்திக் காட்ட வல்லவன்; சமையம் நேர்ந்தபோதுதான் அவனது அற்புத சக்தியைக் காட்ட நேர்கின்றன். இந்தக் காரிருளில் தனியே வானவீதி வழியே பாய்ந்துபோய் மேரு வுக்கும் அப்பால் வெகுதாரத்திலுள்ள சஞ்சீவி மலையை அடி யோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து இறந்தவ்ர்களை யெல்லாம் எழுப்பியிருக்கிருன்” என நேர்ந்திருக்கும் கிலேமை களை விளக்கி மேலும் அம் மதிமான் சால்போடு பேசினன்.