பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,598 கம்பன் கலை நிலை மாலியவான் உரைத்தது. இலங்கையி னின்று.மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து வலங்கிளர் மருந்து கின்ற மலையொடுங் கொணர வல்லான் - அலங்கலந்தடந்தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் கலங்கலில் உலகுக் கெல்லாம் காரணம் கண்ட வாற்ருல். (1) நீரினைக் கடக்க வாங்கி இலங்கையா கின்ற குன்றைப் பாரினில் கிழிய வீசின் ஆருளர் பிழைக்கம் பாலார்? போரினில் பொருவது எங்கே? போயின அனுமன் பொன்மா மேருவைக் கொணர்ந்து இவ் ஆர்மேல் இடுமெனின் விலக்க லாமோ? முறைகெட வேண்டின் முன்பு கினேந்ததே முடிப்பன் முன்பின் குறைவிலாக் குணங்கட்கு ஆங்கோர் கோதிலர் வேதம் கூறும் இறைவர்கள் மூவர் என்பது எண்ணிலார் எண்ண மேதான் அறைகழல் அனும ைேடு நால்வரே முதல்வர் அம்மா! (3) இறந்தவர் இறந்து திர இனி ஒரு பிறவி வந்து பிறந்தன மாகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி மறந்தனம் எனினும் முன்னம் சன கியை மரபின் ஈந்து அவ் அறந்தரு சிந்தை யோரை அடைக்கலம் புகுதும் ஐய! . (4) மறிகடல் குடித்து வானே மண்னெடு மடிக்க வல்ல எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை யூரும் சிறுவனும் நீயும் அல்லால் யாருளர் ஒருவர் திர்ந்தார் வெறிதுகம் வென்றி என்ருன் மாலிமேல் விளைவது ஒர்வான். வாலியை வாளி ஒன்ருல் வானிடை வைத்து வாரி வேலேயை வென்று கும்ப கருணனே விட்டி ேைன * - ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார்? குலியைப் பொருப்பி ைேடும் துளக்கிய விசயத் தோளாய்! (6) i. (மாயா சிதைப் படலம். 5-8). -- இலங்கை வேந்தனை நோக்கி மாலியவான் இங்கே கூறி யுள்ள குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். தங்கள். நிலைமையையும் எதிரிகளின் வலிமையையும் பல வகையிலும் எடுத்துக் காட்டி நெஞ்சம் தெளிந்து திருந்தும்படி மன்னனிடம் அம் முதியவன் அதி விசயமாய் மன்ருடியிருக்கிருன்: 'திரிலோ காதிபதியே! மூவுலகங்களின் ஆட்சி தங்கள் கையில் இருந்தும் நம் குலத்துக்கு எங்கும் இழி பழிகளும் அழி துயர ங்களும்