பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4600 கம்பன் கலை நிலை குறித்திருத்தலால் சிறந்த புண்ணிய சீலர்கள் என்று அவரை, இந்தக் கிழவன் கிழமையோடு எண்ணியிருந்துள்ள்மை தெரிய வந்தது. நெஞ்சில் நினைந்திருந்தது மொழிவழியே வெளியாயது. பகைவராய் மூண்டிருந்தாலும் தகைமையோடு ஆவரு, டைய தன்மைகளை ஒர்ந்து வந்திருக்கிருன்; ஆகவே உண்மை நிலையை ஈண்டு இங்கனம் உறுதியாகத் தெரிய உரைத்தான்.

எதிரிகளிடம் தருமம் கழைத்திருத்தலால் அவர் கருதிய, கருமங்கள் யாவும் கைகூடி வருகின்றன;. இடையே நேர்ந்த, அபாயங்கள் எல்லாம் நீங்கி நிலை உயர்ந்து நிற்கின்றனர். அவருடைய ஆற்றல்களும் வெற்றிகளும் எவ்வழியும் செவ்வை யாய்ச் சிறந்து விளங்குகின்றன” என இன்னவாறு அம் முதி யவன் எண்ணி வியந்திருக்கிருன். அந்த எண்ணங்கள் வாயப் மொழிகளில் வளமையோடு "ஈண்டு வெளி வந்துள்ளன. * -

சீவர்களுடைய வாழ்வும் தாழ்வும் கல்வினை தீவினைகளால் முறையே நிகழ்ந்து வருதலால் தரும நீதிகளையும் பாவத் தீமை களையும் கருத நேர்ந்தான். அரக்கர்கள் இதுவரையும் பல வகை யான மேன்மைகளோடு வலியராய் வாழ்ந்து வந்தனர். செல்வ வளங்கள் கிறைந்த அந்தச் சிறந்த வாழ்வுகளுக்கு இலங்கை வேந்தன் புரிந்த தவமே ஏதுவாய் நின்றது. தலைவன் செய்தி, தவம் அவன் குலத்துக்கெல்லாம் உயர்ந்த நலன்களை உதவியரு. ளியது. அந்த இன்ப போகங்களை அனுபவித்து வருங்கால் செல், வச் செருக்காலும் உள்ளக் களிப்பாலும் எல்லாரும் பொல்லாத புலைகளில் புகுந்து அல்லல்களைச் செய்ய நேர்ந்தார். பாவத் ைேம கள் பற்றித் தொடர்ந்தன. வெற்றிக் களிப்பால் வீறுகொண் டிருந்த இராவணன் எவ்வழியும் இறுமாந்து வெவ்விய வினைகளை விழைந்து புரிந்தான். முடிவில் கொடிய தீமையைத் துணிக்க செய்தான். உயர்ந்த உத்தம பத்தினியின் உள்ளம் கொதிக்கக் செய்தமையால் பகையும் பழியும் பாவமும் அழிவும் வெள்ளி மாய்த் தொடர்ந்து வந்தன. துள்ளித் துடித்து அரக்கர் இனங் கள் அழிந்து படுகின்றன. அந்த அழிவு நிலையை நினைக்க கினைந்து இந்த முதியவன் உளம் கழிபெருந் துயரமா புளேந்து வருகிறது. அவ்வரவு இங்கே உரைகளால் உணர்ந்து கொள்ளி வந்தது. குலத்தின் அழிவைக் குல முதல்வனிடம் குறித்தான்.