பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 4867 வைனன் உவணன் வைன தேயன் - பறவை வேந்தன் பன்னக வைரி - க.அழன் தார்க்கியன் செளரி கருடன் . இமையிலி எனவும் இயம்பப் பெறுமே." (பிங்கலங்தை) கருடனுக்கு இவ்வாறு பெயர்கள் வந்துள்ளன. காரணக் குறிகளாய் வந்துள்ள பரியாய நாமங்கள் கருதி உண வுரியன. கருடன் நெடிய துரத்திலிருந்தாலும் கொடிய விடமுடைய பாம்பு அஞ்சும் ஆதலால் பன்னக வைரி என வர் தக. பன்னகம்=பாம்பு. வைரி= வயிரங்கொண்ட சத்துரு. "படர்சிறைப் பன்னிறப் பாப்புப் பகையைக் கொடிஎனக் கொண்ட கோடாச் செல்வன்.” . ■ (பரிபாடல், 13) பாம்பின் பகையாகிய கருடனைக் கொடியாகக் கொண்ட செல்வன் எனத் திருமாலை இது இங்கனம் குறித்துள்ளது. பாம்பு கடித்த விடம் கருட மந்திரத்தால் நீங்கி விடுகிறது. கரு டனது ஒலியைக் கேட்டாலும் பாம்புகள் அஞ்சி கடுங்கும். "வேகப் புள்ளின் வெவ்விசை கேட்ட நாக மகளிரின் நடுங்கு வோரும்;" (பெருங்கதை, 1-44) கருடனுடைய வாய் ஒலியைக் கேட்டு காக கன்னியர் கடுங்கினர் என இது குறித்துள்ளது. அதிசய வேகமாய்ப் பறக்க செல்லும் இயல்புடையது ஆதலால் வேகப்புள் எனக் கருடனுக்குத் தனி உரிமையாக ஒரு பெயரும் வந்தது. ஆழியான் ஊர்திப் புள்ளின் அருஞ்சிறகு ஒலியின் காகம் மாழ்கிப்பை அவிந்த வண்ணம் வள்ளல்தேர் முழக்கி னுைம் சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞருள் சுருங்கிச் சேக்கைக் கோழிபோல் குறைந்து கெஞ்சின் அறம் என மறமும் விட்டார். (சீவக சிந்தாமணி, 449) கருடனது சிறகின் ஒலியைக் கேட்டுப் பாம்பு மயங்கிப் படம் ஒடுங்கியதுபோல் வேகனது தேர் ஒலியைக் கேட்டு வேடர் வீரம் இழந்தார் என இது குறித்திருக்கிறது. கருடனுக்கும் பாம்புக்கும் உள்ள பகைமை கிலே இதல்ை அறியலாகும். குல விரே ாதிகளாய் இவை குலவி யுள்ளன.