பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4601 எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும் சிறுவனும் யுேம் அல்லால் யார் உளர்? . இராவணனை நோக்கி மாலியவான் இவ்வாறு விசயம்ாய் வினவி யிருக்கிருன். கிழவனுடைய மன வேதன்ைகள். மொழிகள் தோறும் வெளி வந்துள்ளன. தன் குலம் அவலமாய் அழிந்து வருவதை நினைந்து கொந்துள்ளான். எறிபடை அரக்கர் என்றது யாவரும் போர் விரர்கள் என அவரது இயல்பரன அடலாண் மைகளைக் குறித்து வந்தது. நல்ல சுத்த வீரர்கள் எல்லாரும் நாசமாய்ப் போயினர் என்று அல்லல் உழந்திருக்கின்ருன். இப்பொழுது உருப்படியாய் இருப்பவர் இருவரே எனக் குறிப்பிட்டுள்ளான். அழிவு நிலையை அவன் விழி திறந்து கண்டு தெளிவடைந்து உய்ய இவ்வகையில்இங்கே மொழிகள் வந்தன. சிறுவன் என்றது இந்திரசித்தை. நீ என்றது இராவணன. ஊர் இருக்கிறது; நீ இருக்கிருப்; உன் மகன் இருக்கிருன்;. வேறு இங்கு யார் இருக்கிருர்? இதனைக் கொஞ்சம் நெஞ்சம் ஒர்ந்து ஆராய்ந்து பார்! என இருப்பு நிலையை அரசன் கருதி யுணரக் கிழவன் காட்டியிருக்கிருன். இராச குடும்பத்தில் எல் லாரும் செத்துப் போயினர்; இனிச் சாகும்படியாய் இருப்பவர் இருவரே என்பதை உய்த்துணர உரைத்தான். கும்பகருணன் அதிகாயன், அக்கன், கும்பன், நிகும்பன், தேவராந்தகன், நராந்த கன் முதலிய கிளைஞர்கள் அழிந்து போனதைக் கிளர்ந்து காட் டியுள்ள காட்சிகள் உணர்ந்து சிந்தித்து உறுதி தெளியவுற்றன. நேர்ந்திருக்ரும் நிலைமைகளை ஒர்ந்து திருந்தி இகல் ஒழிந்து கொண்டால் அன்றி வேறு புகல் இல்லை என்று முதியவன் உறுதியாகத் தெளிந்து நின்றுள்ளான். அந்த உள்ளத் தெளிவி ல்ை உரைகள் உரம் ஏறி நேரே உருக்கமாய் வந்திருக்கின்றன. மாலியவான் நல்ல சொல் வன்மையுடயவன்; நடுவு நிலைமை யுடன் எதையும் ஆராய்ந்து காண்பவன்; வயது முதிர்ந்தவன் ஆதலால் மதிநலமும் உலக அனுபவங்களும் இவனிடம் நிறைந் திருக்கின்றன. நிருகர் குலம் நிலை குலைய நேர்ந்துள்ளதை கினைந்து கெஞ்சம் நெடிது வருந்தியுள்ளான். உள்ளக் கவலைக ளால் உணர்ச்சி மீதுார்ந்து அரசனை எதிர்த்து அறிவு நலனே. வலி 576 - - ---

. . * * *