பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4602 கம்பன் கலை நிலை யு.டித்திக் கூறுகிருன். எவரும் அஞ்சி ஒதுங்குகின்ற இலங்கை, வேந்தன் எதிரே இவன் கலங்காமல் கின்று காரியங்களை விரிய மாப் விளம்பி வருகிருன், குடிக்கும் குலத்துக்கும் அவளுல் அழிகேடுகள் விளைந்தன என்று. உள்ளம் உளைந்து வருந்தியிருக் தலால் உறுதியோடு ஊக்கி உரையாடுகின்றன். வெளியே துள்ளி வந்துள்ள உரைகள் உள்ளத்தில் உறைந்துள்ள உணர்ச் சிகளை விளக்கி நிற்கின்றன. நெஞ்சத் துடிப்புகளை வாய் மொழி களில் நேரே காண்கின்ருேம். நிலைமைகளை உணர்கின்ருேம். What is felt with emotion is expressed also with the same movements. (Eloquence) 'உள்ளத்தில் கலித்த உணர்ச்சி அப்படியே உரைகளால் வெளிப்படுகின்றது” என்னும் இது இங்கே அறிய வுரியது. அரசனுடைய மதிகேடு சமுதாயத்துக்கு அவகேடுகளை 'விளேத்திருக்கின்றது என்று மாலியவான் கருதி மறுகி வருக லால் உறுதி நலங்களை உருக்கமா யுரைத்து நிற்கிருன். நேர்ந்து வரும் நிகழ்ச்சிகளை ஒர்ந்து உணர்ந்து வந்துள்ளான்; தன் லுடைய கருத்தில் நீதி யிருத்தலால் மன்னன் முன்னிலையில் தன்னிலை யாதும் தளராமல் தைரியமாய் வாதாடுகின்ருன். சீதையைக் கவர்ந்து வைத்திருப்பது கொடிய தீது; நெடிய பழி; அந்த உத்தமியின் உள்ளத்தை நோகச் செய்த தீமையே அரக்கர் குலத்தைச் சாகச் செய்து வருகிறது என்று உணர்ந்து கொங்துள்ளமையால் அத் தேவியை நாயகன் பால் விட்டு விடும் படி சுட்டியுரைத்து விவேகத்தைப் போதித்து வேண்டி நின்ருன். மேல் விளைவது ஒர்வான். - என மாலியவானைக் கவி இவ்வாறு குறித்திருக்கிரு.ர். சீதையை விடவில்லை ஆனல் அரக்கர் குலம் அடியோடு காசமாய்ப் போய்விடும் என்று இவன் உறுதி செய்துள்ளமை, இதல்ை உணர வந்தது. குறிப்பு கூரிய நோக்குடையது. எஞ்சியுள்ள அரக்கராவது மானமா உயிர் வாழவேண்டு மால்ை சானகியை இராமநாதனிடம் உடனே கந்துவிட வேண் டும் என்று சிங்தை துணிந்து தெளிவோடு கூறினன். பரிவும்