பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4603 அறிவும் துணிவும் உரைகளில் பாண்டும் ஒளி விசி வந்துள்ளன. குலியைப் பொருப்பிைேடும் துளக்கிய விசயத் தோளாய்! தன் உள்ளக் கருத்துக்களை உறுதியோடு உரைத்து வந்த மாலி யவான் இறுதியில் இவ்வாறு குறிப்பு மொழியால் புகழ்ந்து கூறியுள்ளான். பழைய தலைமைகளும் நிலைமைகளும் பாழாய்ப் போயினவே! என்று பரிந்து பேசுகின்ருன்ஆகல்ை இதனை இங்ங் னம்வரைந்துகூறினன். புகழ்மொழிபொருள் பொதிந்து வந்தது சிவபெருமானும் உள்ளம் திகிலுறும்படி வெள்ளியங்கிரியை வேரோடு அள்ளி எடுத்த அதிசய வெற்றிவீரா! என்று இலங்கை வேங்தனை இம் முதியவன் துதி செய்து கின்றது தனது கிலைமையை அவன் நினைந்து தெளிய வந்தது. சூலி=சிவன். சூலம் என்னும் ஆயுதத்தைத் தனக்குத் தனி உரிமையான படைக்கலமாக வுடையவன் என்னும் ஏதுவான் அமைந்தது. அகில உலகங்கனையும் எளிதே அழித்து ஒழிக்கவல்ல சங் கார கருத்தாவையும் அங்கே கதி கலங்கச் செய்த ஒ இலங்கை வேந்தனே! உனது அந்த அதிசய ஆற்றலும் ஏற்றமும் ஒரு மனிதன் எதிரே யாதும் பண்ணுமல் மண்ணுய் மாய்ந்து போயினவேlஅதனை நீ எண்ணி உணரவில்லையே! என்று இரங்கி இனைந்திருக்கிருன். கினேவைத் தாண்டிநிலைமையைக் காட்டினன். பண்டு கொண்ட தவத்தின் நிலையால் சிவத்தையும் வென் ருப்; இன்று மண்டியுள்ள அவத்தின் புலையால் மனிதன் முன் அனும் குரங்குகளிடமும் சிறுமை யடைந்து சீரழிய நேர்ந்தாய்! உன் பேர் அழிந்தது; பெருமை தொலைந்தது; அமரரும் எவல் புரிந்து வந்த அரச மாட்சியும் அடுயோடு, நாசமாயது; இந்த சிச நிலைகளுக்கெல்லாம் மூல காரணம் சீதைமேல் வைத்த ஆசையேயாம்; இனிமே லாவது உணர்ந்து அந்த அவல ஆசையை ஒழித்துவிடு; ஒழியாது கின்ருல் எல்லாரும் ஒல்லையில் ஒழிந்தே போவோம் என்று உறுதியாகச் சொல்லி முடித்தான். வேந்தன் வெறுத்தது. முதியவனை மாலியவான் அதி விசயமாப்க கூறிய மதி மொழிகள் யாதும் இலங்கை வேந்தன் செவியில் ஏறவில்லை. செருக்கும் சினமும் அவனிடமும் பெருக்கமாகவே ஓங்கி