பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4606 கம்பன் கலை நிலை மறையை அபிமந்திரித்தேன்; அரிய தெய்வப் பகழியை மந்திர முறையோடு பொருகளத்தை நோக்கி எப்தேன்; இலக்குவன் மீது இலக்காப்ப் பானம் பாய்ந்தபோது ஒர் எதிர் சோதி விசயது; ஆயினும் அயர்ந்து சாய்ந்தான்; வானர சேனைகள் யாவும் உடனே மாண்டு விழுந்தன. வெற்றி விளைதேது என்று. நான் மீண்டு வந்தேன். நான் கருதி விடுத்தபடி பிரமாத்திரம் இராமனை யாதும் செய்யவில்லை. இறந்து பட்டவரும் அனுமான் கொண்டுவந்த சஞ்சீவியால் எழுந்துகொண்டனர்; மீண்டும் போராட மூண்டு விருேடு ஆரவாரம் செய்கின்றனர்; நாம் போராட மூண்ட எதிரியின் நிலைமையை ஈண்டு நேர்மையோடு கூறுகின்றேன்; இதல்ை பகைவைேடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. எதிரியினுடைய அரிய மகிமைகளையும் பெரிய வலிமைகளையும் இங்கே தெரிய வேண்டும் என்று உரிமையோடு உரைத்தேன்; இனி நாம் செய்யவேண்டியதை நன்கு ஆராய்ந்து விரைந்து செய்யவேண் டும்; கருமம் மருமம் மிக வுடையது” என இன்னவாறு மேக நாதன் யூக விவேகமாய்த் தங்கையிடம் தகவோடு உரைத்தான். சிறந்த போர்வீரனுடைய வாயிலிருந்து வந்திருக்கும் வார்த் தைகள் உயர்ந்த உண்மைகளை உணர்த்தி உறுதிநிலைகளைத் துலக்கி நிற்கின்றன. அவனது உள்ளத்தின் ககுதியை உரைகளால் கூர்ந்து ஒர்ந்து ஈண்டு சாம் உள்ளம் உவந்து கொள்ளுகிருேம். எதிரியை வரும் இகழ்ந்து பேசுவர்; அதற்கு முழுதும் மாருக இங்கே அவன் வியந்து விழைந்து புகழ்ந்து பேசியிருக்கி ருன், புகழ்ச்சி நிலை அதிசய உயர்ச்சிகளை விளக்கி யுள்ளது. மானிடன் அல்லன்; தொல்லே வானவன் அல்லன்; மற்றும் மேல் கிவர் முனிவன் அல்லன். --- - இராமனை இன்னவா.அறு அன்மை மொழிகளால் குறித்து அவனது மேலான தன்மையைத் துலக்கி யிருக்கிருன். கூறி யுள்ள முறை கூரிய சீரிய குறிப்புகளோடு தோய்ந்து வக் துள்ளது. அதிசய நிலையினன் என எதிரியைத் துதி செய்தான். . உருவநிலையில் இராமன் மனிதன் என அமைந்திருக்கிருன்; ஆகவே யாவரும் அவனே மனிதன் என்றே கருதுவர்; அவ்வாறு