பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இர FTo LT) ன் 4607 கருதலாகாத என்பான் மானிடன் அல்லன் என்ருன் வெளியே தோன்றுகின்ற வடிவத்தைக்கொண்டு அவனே முடிவு செய்வது மடமையாம்எனக்கடமையைத்தெளிவாமதியுறுத்தியிருக்கிருன். தேவர்களுடைய நிலைமை வலிமைகளை இந்திரசித்து நன்கு அறிந்தவன். தேவராசனை இந்திரனையும் எளிதே வென்று இசை பெற்றுள்ளவன்; வானவர் எவரும் இவன் எதிரே மானம் அழிந்து ஒதுங்கிப் போயினரே யன்றி யாரும் துணிந்து எதிர் நின்றதில்லை; அங்ஙனம் எளியராயுள்ள வானவர் இனத் தைச் சேர்ந்தவன் என்று இராமனை எண்ணுவது பெரிய பிழை யாம் என்று கருதியுள்ளான் ஆதலால் வானவன் அல்லன் என வரம்பு செய்து அவனது தனி மகிமையைத் தகவா விளக்கினன். மரவுரி தரித்துச் சடைமுடி கொண்டு ஒரு தவசிபோல் இராமன் மருவியுள்ளான் ஆதலால் அவனே ஞான முனிவன் என்று சிலர் சொல்ல நேர்வர்; அவ்வாறு கூறுவதும் தவரும்; போர் விரமும் வில்லாண்மையும் எல்லையில்லாத நிலையில் ஓங்கி அதிசய ஆற்றலோடு துதிகொண்டுள்ள பெரிய வில் விரனை வறிய முனிவன் என எண்ணுவது சிறிதும் பொருந்தாது; பெரி தும் அவன் வேறே என்பான் முனிவன் அல்லன் என்ருன். வடிவத்தைக் கண்டும், வேடத்தைக் கொண்டும், அழகை நோக்கியும் மனிதன், முனிவன், தேவன் என இராமனை எண்ண லாகாது; இவர் எவரினும் வேறுபட்ட ஒர் அதிசய நிலையினனே என்று துதிசெய்து கின்றன். முழுமுதல் பரமனே இந்த உருவில் இவ்வர்.று இங்கே வந்திருக்கிருன் எனத் தன் தங்தை எதிரே இந்திரசித்து சிங்தை துணிந்திருப்பது சிந்திக்க வந்தது. சிறிய தங்தையார் உங்கள் முன்னிலையில் இராமனைக் குறித்து முன்னம் விரித்துச் சொன்னபோது நான் அதை யாதும் மதியாது அவமதித்தே யிருந்தேன். இப்பொழுது போரில் புகுந்து நேரில் கண்ட பின்புதான் அவர் கூறியன யாவும் சரியான உண்மை என்று உறுதி செய்து கொண்டேன். வீடணன் மெய்யில் சொன்ன ஒருவன் என்றே தெரிந்தது. இராமனைக் குறித்த இரா வணன் எதிரே இந்திரசித்த இவ் வாறு உரைத்திருக்கிருன். முக்தி மந்திராலோசனை புரிந்த