பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4608 கம்பன் கலை நிலை பொழுது விபீடணன் இலங்கை வேந்தன் எதிரே நின்று பேசிய பேச்சுகளை யெல்லாம் இந்திரசித்து உடனிருந்து கேட்டு வங் தான் ஆதலால் அந்த உரைகள் யாவும் உண்மையே என்று ஈண்டு உறுதி செய்தான். உறுதியை உரிமையா நேரே உரைத்தான். தன்னுடைய அண்ணன் அறிந்து தெளியும்படி பலவும் கூறி வந்த அந்த ஞானத்தம்பி முடிவில் முடிவாக உரைத்த உறுதி மொழி இந்திரசித்தின் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது ஆதலால் அதனையே சிந்தனை செய்து இங்கே துணிந்து சொன் ன்ை. மனத்தில் மன்னியிருந்தது ஈண்டு வெளி வர நேர்ந்தது. 'தன்னின் முன்னிய பொருளிலா ஒரு தனித் தலைவன் அன்ன மானுடன் ஆகிவந்து அவதரித்து அமைந்தான் சொன்ன கம்பொருட்டு உம்பர் தம் சூழ்ச்சியின் துணிவால்" என * முன்னம் விபீடணன் சொன்னதையே மேகநாதன். ஈண்டு விவேகமா ஞாபகப்படுத்தி விளக்கி நின்ருன். மெய்யில் சொன்ன என்றது உண்மையாக உணர்ந்து உரைத்த என அவ், வுரையின்நேர்மையான தாய்மையைப் புகழ்ந்து கூறியபடியாம். இளைய பிதாவின் ஞான நிலையையும் சத்திய நெறியையும் புத்தி போதனைகளையும் இக் கலைமகன் இங்கே கருதி வியந்திருக் கிருன். அவ்வியப்பும் உவப்பும் உரைகளால் உணர வந்தன. எண்ணில் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன். இராமனை இவ்வாறு கண்ணியமாக் கருதித் தந்தையிடம் உறுதி கூறியிருக்கிருன். உலக எண்ணங்கள் எல்லாம் அறவிே ஒழிந்து பரம ஞான நிலையில் மருவியுள்ள பெரிய யோகிகள் உரிமையோடு எண்ணும் அரிய பர ம்பொருளே இராமன் என் னும் பேரால் பாரில் வந்திருக்கிருன் எனத் கங்கையின் நேரில் மைந்தன் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ஒருவன் என்றது தனக்கு இணையாக யாரும் இல்லாமல் கனி முதல் தலைமையில் நிலவி நிற்கும் அக் நிலைமை இனிது தெரிய வந்தது. o இன்னவாறு தன்னை மறந்து எதிரியை வியந்து புகழ்ந்து ■ # ■ = 野 ■ 畢 --- . வந்தவன் உடனே வேறு வழியில் மாறினன். நேர்ந்த பகைவன்

  • இந்நூல் பக்கம் 3453, வரி 23 பார்க்க