பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4368 கம்பன் கலை நிலை கருட வாகனரான திருமால் ஒரு நாள் சிவபெருமானக் கண்டு உவகையோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்பெr ழுது அப் பரமன் கழுத்தைச் சூழ்ந்து படம் விரித்து நின்றி பாம்பு பறவை வேங்தை நோக்கிக் கருடா சுகமா?' என்று கேட்டது. இருக்கும் இடத்தில் இருந்தால் சுகம் தான்” என்ற அதற்குக் கருடன் பதில் உரைத்தான். இந்த வி ைவிடைகள் விநயமிக வுடையன; அரிய பல பொருள்களை அறியச் செய்தன. நஞ்சை அமுதாக்கொள் நாதன் இடத்திருந்த நெஞ்சத் துணிவில்ை நேர்நோக்கி-அஞ்சிறைய புள்ளரசை நாகம் புதுமை புகன்றது தள்ளரிய தானபலம் தான். கருடனுடைய நிழலைக் கண்டாலும், ஒலியைக் கேட்டா அம் அஞ்சி நடுங்குகின்ற பாம்பு அதனை எதிர்நோக்கிக் குசலம் விசாரித்தது சார்ந்துள்ள இடத்தின் மகிமையால் வாய்ந்து நின் றது. பெரிய இடத்தைச் சேர்ந்தால் அரிய மேன்மைகள் உள வாம் எ ன்னும் உண்மை ஈண்டு D - буђГЛ வந்தது. கருடன் திருமாலுக்குப் பலவகையிலும் உரிமையாய் நின்று பணி புரிந்து வருகிருன். ஊர்தியாய் நின்று உதவுவதோடு கொடியாகவும் அமைந்து கொற்றம் புரிந்து வருதலால் கருடக் கொடியான் எனத் திருமாலுக்கு ஒரு நாமமும் வந்தது. o "மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோன்." (புறம், 56) நக்கீரனர் திருமாலே இங்ஙனம் குறித்திருக்கிரு.ர். பாவகன் என்றதல்ை கருடனது பரிசுத்தநிலை தெரிய வந்தது. பறவைகட்குத் தலைவன் ஆன அவன் அறிவிலும் ஆற்றலி லும் நிலையுயர்ந்து நின்ருன். வீரகம்பீரமான பார்வையுடையவன் கருட பார்வை எனக் கம்பீர கோக்கை உரைத்து வருவது உலக வழக்காயுள்ளது. அவனது தலைமை நிலை புகழ் மிகப் பெற்றது விலங்குகளுள் சிங்கம் வியனுடையது. பறவைகளுள் கருடன் உயர்வுடையவன். "ம்ருகாணும்ச ம்ருகேந்த்ரோகம்; வைகதேயச்ச பகவினம். (பகவற்கிதை, 10.30