பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரசித்து: இராவ னன்: இங்கிரசித்து: f இராவணன்: இந்திரசித்து: இராவணன்: இந்திரசித்து: 7. இராம ன் - 46] அந்த வேள்வியை யாரும் அறியாதபடி அதி இரகசியமாய் மறைந்திருந்து செய்ய வேண்டும்; அவ்வாறு நான் கர்ந்து செய்யுங்கால் உங்கள் தம்பி களவாப் வந்து உளவறிந்து இராமனிடம் கூறவும் கூடும்; அங்கனம் கூறி விடின் எதிரிகள் இடையே வந்து தடை செய்து யாகத்தைக் கெடுத்து விடுவர்; அது கெடின் யாதொரு வெற்றியும் நாம் அடைய முடியாது. அழிவுகளையே அடைய முடியும். அவன் நம் குலத்தின் கொடிய விரோதி: அந்தப் பாதகனை என் தம்பி என்று இனி உன் வாயால் சொல்லாதே; உடன் பிறந்தே கொல்லும் பொல் லாத தீய நோய்; அண்ணன் அழிந்து ஒழியும்படி கேடு எண்ணுகின்றவன் என்பதை அவனுக்கு அமைந்த பேரே உலகம் அறிய உணர்த்தியுள்ளது. அண்ணனை விடச்செய்யும் காரணத்தால் வீடணன் என்னும் பேர் பூரணமாய்கின்றது. விடல்=சாதல். கொல்லும் கொலைஞன் கொடிதாய் நிற்கின்ருன். அவரைக் குறித்து இது பொழுது நாம் நொந்து கொள்ளுவதால் பயன் இல்லை. கருதிய கருமத். தையே மருமமா நாம் விரைந்து செய்யவேண்டும். அந்தக் கொடியவன் எதிரியிடம் உளவு கூறிக் குடியைக் கெடுத்து விடுவானே; அக் குடிகேடன் ஒழிய வில்லையே! அதற்கு என்னவழி செய்வது? நான் மருமமாச் செய்யத் துணிந்த கருமத்துக்கு யாதொரு இடையூறும் நோாதிருக்கும்படி முன்ன தாகவே தடை செய்து காத்துக்கொள்ள வேண் டும். அந்தக் காப்பு முறையே காரிய சித்தியை விரியமாய் விளைத்தருளும் அதனைக் கூரிய நோக் கோடு கூர்ந்து ஒர்ந்து ஒல்லையில் செய்வதே நல்லது. முன்னதாக என்ன உபாயம் செய்யலாம்? நம்முடைய மருமமான கருமத்துக்கு அபாயம் நேராதவாறு காக்கவுரிய உபாயம் ஒன்றே உள்