பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா. ம. ன் 4613 கதி கலங்கி ஓடி இராமன்னிடம் சொல்லுவான்; அவன் அல்லல் ம ழந்து அலறித் துடிப்பான்; பெண்டாட்டி செத்துப் போ ள்ை; காயரும் தம்பிமாரும் சாக நேர்ந்துள்ளார்; ஊர் பாழாய் விடும் என்று அவலத் துயரால் அவன் அலமந்து விழுவான்; வானா விரர்கள் யாவரும் திகிலடைந்து மயலுழந்து மயங்கிச் செயலிழந்து கிடப்பர்; சேனைகள் யாவும் செத்த சவங்கள் போல் ஆய்விடும்; முடிவில் எல்லாரும் திருவயோத்திக்கே போய் விடவேண்டும் என்று துணிந்து விரைந்து செல்ல நேர் வார்; எதிரிகளுடைய தொல்லை யாதும் இல்லாமையால் 'நான் ஒல்லையில் வேள்வியை முடித்து மீண்டு விடுவேன்; அவ்வாறு மீண்டு வந்தால் பின்பு பகைவராய் மூண்டவர் யாவரும் படு நாசமாப் மாண்டு மடிகல் உறுதி” என்று இந்திரசித்து துணிக் துள்ளதைத் தந்தையிடம் இங்கவாறு தெளிவா உரைத்தான். இந்த உரை களைக் கேட்டதும். அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். கருதியபடியே காரியத்தை விரைந்து செய்யும்படி வேண்டி நின்ருன். சீகா கேவிபோல் மாய வஞ்சமா ஒருத்தி யைச் சமைத்துவர மேகநாதன் வேகமாய்ப் போயினன். இரா வணன் உள்ளம் உவந்து உஅறுவதை எ திர்நோக்கிக் கள்ளமா யிருந்தான். தீய மாய வேலைகள் செய்ய நேர்ந்தன. சானகி உருவம் ஆகச் சமைத்து,

  • - o அனுமன் முன்னே வாளில்ை கொன்று.

என்றகளுல் இந்திரசித்து பொய்யாகச் செய்ய மூண்டு போயி ருக்கும் வெய்ய வஞ்ச நிலை யாவும் விளங்கி நின்றது. சிறந்த போர் விரன் இப்படிக் கரவாய் இழிந்த வேலையைச் செய்ய நேர்ந்தது அழிவு காலத்தின் அறி குறியாய் அமைந்தது. எப்படி யாவது பகைவரைத் தொலைத்து ஒழித்து வெற்றிபெற வேண்டும் என்னும் ஆசையால் நீச வேலையை நெஞ்சம் துணிந்து செய்ய நேர்ந்தான். பகைமை மூண்ட போது தகைமை மாண்டு போகிறது. படு பாதகங்களையும் புரிய விரைகின்ருர். அவன் அங்கே அவ்வாறு மாய வேலையை மறைந்து செய்ய நேரவே இங்கே போர்க்களத்திலிருந்து வானர விரர்கள் வஞ்சம் தீர்க்க விரைந்தார். இவரது விரைவு விர வெறியாயது: