பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4614 கம்பன் கலை நிலை கொள்ளிவைக்க மூண்டது. அமுத சஞ்சீவியால் ஆவி வந்து எழுந்ததும் வானர சேனை கள் மான விரங்களோடு போருக்கு அறை கூவி ஆரவாரங்கள் செய்தன. அதன் பின் வானர வேந்தனை சுக்கிரீவன் இராமனை அணுகி வணங்கினன். "ஆண்டவா! எனது வேண்டுகோள் ஒன்றுக்கு இணங்கியருள வேண்டும்” என்று வேண்டினன். "என்னை அது?’’ என்று வள்ளல் புன்னகையோடு வினவினன். நாங்கள் பராமுகமாய் அமர்ந்திருக்கும்போது அந்த அரக்கன் மகன் கொஞ்சமும் இரக்கம் இன்றி மாய வஞ்சமாய் மறைந்து கின்று பிரமாத்திரத்தை ஏவி எல்லாரையும் கொலை செய்து போனன். அனுமானுடைய பேரருளால் ஆருயிர் பிழைத்து எழுந்தோம். போரில் மாண்டு போளுர் என்று புலையாய் நீண்டு செருக்கி நிற்கின்ற அரக்கர் குலத்துக்கு எங்களுடைய ஆற்றல் களைக் காட்ட வேண்டும்; "விடியும் வரையும் பொறுத்திராமல் * இப்பொழுதே இலங்கை புகுந்து எல்லாரும் கலங்கி அல.றம்படி தீக் கொள்ளிகளை ஏவிச் சுட்டுப் பொசுக்கி முடியுமானல் இங் திரசித்தைக் கட்டி யிழுத்து இங்கே கொண்டு வரவேண்டும் என்று அங்கதன் முதலிய சேனைத் தலைவர்கள் கருதுகின்றனர்; அவர் கருத்தின்படி விடுத்தருள வேண்டும்” என்று விருப்போடு தொழுது கின்ருன். உற்ற நண்பனை அவன் உரைத்த மொழி யைக் கேட்டதும் கோதண்டவீரன் சிரித்தான்; 'உன் விருப்பப் படியே ஆகட்டும்’ என்று உத்தரவு கொடுத்தான். கொடுக்கவே, எழுபது வெள்ளம் வானரங்களும் துள்ளி எழுந்து கொள்ளிக் கட்டைகளை எடுத்துக்கொண்டு இலங்கை மேல் கடுத்துப் பாய்ந்தன. சுக்கிரீவன் முன்னதாகக் காவித் தலைமையான நெடிய கோபுரத்தின் உச்சி மேல் நின்று கொண்டு யாவரையும் வென்றி விருேடு எவினன். தேவரும் வியந்து விலகக் கவியின் சேனைகள் கடுத்துப் பாய்ந்து கொதித்து மூண்டு கொள்ளிகளை யாண்டும் அள்ளி விசின. நெருப்பு வானங்கள் போல் வான விதி எங்கிலும் ஒளி வீசி இலங்கை நகருள் பாய்ந்து எவ்வழியும் சூழ்ந்து வீழ்ந்தன. மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களி அம் தீக் கொள்ளிகள் திரண்டு பாயவே அரக்கர் யாவரும் அஞ்சி வெருண்டனர்! ஊர் நாசம் அடைய சேர்ந்ததே! என்று மகளிரும் மைந்தரும் மறகுகள் எங்கனும் மறுகி அலமந்தனர்.