பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4615 ஆசைகள் தோறும் அள்ளின. கொள்ளி மாசறு தானே மர்க்கட வெள்ளம், - நாசம் இவ் வூருக்கு உண்டென கள்ளின் விசின வானின் மீன்விழும் என்ன (1) வஞ்சனே மன்னன் வாழும் இலங்கைக் குஞ்சரம் அன்னர் விசிய கொள்ளி அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் செஞ்சரம் என்னச் சென்றன மேன் மேல். (2) கையல் இஞ்சிக் காவல் கலங்கச் = . செய்ய கொழும்திச் சென்று நெருங்க ஐயன் நெடுங்கார் ஆழியை அம்பால் எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை. (3) நான்கு திசைகளிலும் இடை விடாமல் வளைந்து குழ்ந்து நின்று கொண்டு தீக் கொள்ளிகளைச் சேனைகள் வாரி வாரி விசி யிருக்கும் திறல்களையும் நிலைகளையும் இவற்ருல் தெரிந்துகொள்ளு கிருேம். ஆசை=திக்கு. மர்க்கடம்=குரங்கு. - ** விண் வீழ் கொள்ளிகள் போல் வீறுகொண்டு யாண்டும் நெருப்புச் சுவாலைகள் பாயவே இலங்கை வாசிகள் கலங்கி வருந்தினர். பொரு திறலுடைய கிருதர்கள் ஒரு திறலும் தெரி யாமல் மறுகி யுளைந்து மறுகுகள் தோறும் மயங்கி நின்றனர். முன்பு இராமன் ஏவிய அக்கினியாஸ்திரம் கடலில் பாய்ந்த போது அது கொதித்து எரிந்ததுபோல் இலங்கை கதிகல்ங்கி வெந்து நொந்தது. அவ் வேக்காடுகள் சாக்காடுகளை விளைத்தன. - அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் செஞ்சரம் என்றது வானரங்கள் வீசிய தீப் பந்தங்களின் நிலைகளையும் இலங்கை அலமந்த புலைகளையும் ஒருங்குணர வந்தது. மேகநாதன் வஞ்சம் புரிந்து தங்களைச் சாக அடித்த பழியைத் தீர்த்துக்கொள்ள எவ்வழியும் வானரங்கள் நெஞ்சம் கனன்று வேகமாய் விரைந்து யூக வியூகங்களாய் நீண்டு யாண்டும்கேடுகளை மூண்டுசெய்தன. முன்னம் அனுமான் வைத்த யோல் எரிந்து கரிந்த இலங்கை இராவணனுடைய அதிகார ஆணையால் மீண்டும் சிறந்து விளங்கியது. அந்தச் சிறப்பும் விளக்கமும் இப்பொழுது சீரழிய நேர்ந்தன. பண்டுபோல் வீடுகள் பற்றி மண்டி நெடிதா