பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4618 கம்பன் கலை நிலை ուրամ நேர்ந்தது என்று அடங்கி ஒடுங்கி உரிய உபாயங்களை நாடி அனுமான் பரிந்து வேண்டியிருப்பது பாசமயக்காய் விரிக் துள்ளது. சீதையை அத்தீயவன் தீண்டமுடியுமா? எ ன் ற தெளிவு இம்மேதைக்குத் தோன்ருமல் ப்ோயது. அசோக வன த்தில் தான் நேரில் கண்ட அதே உருவத்தின் நீண்ட கூந்தலை இடது கையில் பற்றிக்கொண்டு அக்கொடியவன் கெடிது சீறி கிற்கின்ருன் ஆதலால் நெஞ்சம் கலங்கிக் கெஞ்ச நேர்ந்தான். அவனைப் பலவகையிலும் புகழ்ந்தான். நான்முகனுக்கு ஒருநால் வரின் வந்தாய் நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்! என அவனது குலநிலையின் உயர்வையும்கலையறிவின் பெருமையையும் தலைமை தோன்ற வியந்து கூறி நயந்து நின்ருன், பெண்கொலை பெரும்பழி என்றது. பல வழிகளிலும் செடிய புகழ்களையுடைய நீ இந்தக் கொடிய பழியைச் செய்யலாகாது எனத் தெளிவு கூறி வேண்டினன். இனிய புகழ்ச்சி மொழிகளுக்கு எவரும் எளிதில் வசமாவர் ஆதலால் அந்த வழியில் இறங்கி நேரே சித்தியைக் காண இவ்விரியன் விரைந்தான். எந்த வகையிலா வது எதிரி சிங்தை இரங்கித் தீமை செய்யாமல் திருந்தி விலக வேண்டும் என்று இப்பெருந்தகை பரிந்து முயன்றிருப்பது பரு வம் கருதி இடம் நோக்கிப் புரிந்த கரும விவேகமாய் நின்றது. புன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு. நீ செய்யத் தொடங்கியுள்ள காரியம் உன் புகழ் அடி, யோடு காசமடையும் படியானது; அந்த நீசச் செயலை செய்யா தேl என ஆசையோடு யோசனை கூறியபடியாய் இது உதய மாகியுளது. கொலை கொடிய புலை; நெடிய தீமை, நிலையான பழி பாவங்கள் உடையது; தன்னை அனுகினவரை நீசராக்கி நெடுந்துயரங்களை விளைப்பது; முடிவில் முடிவில்லாத அடுநரகத் தில் ஆழ்த்துவது; அத்தகைய நீசத்தை எத்தகைய நிலையிலும் 硬 யாண்டும் தீண்டலாகாது என்று வேண்டி மொழிந்தான். சாதாரணமான கொலேயே இவ்வாறு வெவ்விய புலைத்) துயரங்களை விளைத்து விடும் என்ருல் பெண் கொலை எவ்வளவு கொடியது எத்துணை நெடிய பழிபாவங்களை யுடையது! மகா உத்தமியான இப்பத்தினியை நீ கொல்ல மூண்ட தைக் கண்டு எல்லா உலகங்களும் அல்லல் உழந்து அலமந்து