பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,622 கம்பன் கலை நிலை ஆவி அழிந்து போகாமல் இன்னும் உடலில் ஒளிந்து கொண் டிருக்கிறதே! நெடிய கடலைக் கடிது கடந்து வந்து உன்னைக் கண்ணுரக் கண்டேன்; களிமீக் கொண்டேன்; எனது புண்ணி யத்தை வியந்தேன்; அண்ணலை நினைந்து திசை நோக்கித் தொழு தேன்; மூவுலகங்களுக்கும் விடிவு நேர்ந்தது என்று உறுதிமீக் கொண்டேன்; நான் எண்ணி மகிழ்ந்த எண்ணம் எல்லாம் பாழாய் ஒழிந்து போயின; கற்பரசியைக் காக்காமல் சிறகிழந்த பறவைபோல் செயலிழந்து கின்றேன்; இது பொழுது மய லுழந்து அழுகின்றேன்; தேவியைப் பிரிந்து ஆவி கலங்கி அல மங் திருந்த எம்பெருமானுக்கு முன்பு உறுதி கூறி உள்ளம் தேற் மினேன். பத்தினித் தெய்வம் இலங்கையின் அசோக வனத்தில் இருக்கிறது; கம்பும் குடிப்பிறப்பும் அம்புத நிலையில் அங்கே களி நடம் புரிகின்றன; கண்ணுர நேரில் கண்டேன்; அஞ்சன வண்ணு! நெஞ்சம் தேறியிரு என்று அன்று தேற்றி ஆற்றிய நான் இன்று போப் என்ன சொல்வேன்? அந்தோ! சானகி இறந்தாள் என்று தெரிந்தால் அந்த மான விரன் உடனே மாண்டு படுவானே, கொடிய மாயம் புரிந்து இராவணன் வஞ் சித்து எடுத்து வந்த உத்தமியை அவனுடைய மகன் வெட்டி விழ்த்தினன்; கடவுளும் இதைப் பொறுத்துக்கொண்டிருக்கிரு.ர். கொடிய பாபிகள் துணிந்து செய்கிற நெடிய தீமைகளைக் கண்டு தரும தேவதையும் அஞ்சி ஒதுங்கி யாதும் ஆற்ருமல் அயலே போயது. தருமம் தலை காக்கும் என்ற பழமொழியும் பழி மொழி யாப் கின்றது. கொலை செய்ய மூண்டபோதே விரைந்து பாய்ந்து அந்தப் புலை மகனேக் கொன்று தொலைக்காமல் நல்ல வார்த்தைகளை நயங்து பேசியது பயந்த பேடி செய்த படியாப் முடிந்தது. கடல் கடந்து வந்து அடலாண்மை புரிந்து ஆற்றி கின்ற அரும்பாடுகள் யாவும் அவலமா பழிந்தன. சஞ்சீவியைக் கொண்டு வந்து யாவரையும் வாழ்வித்த அருந்திறலாளன் என்.று அப் பெருந்தகையால் உவந்து புகழ நேர்ந்த நான் இவ்வாறு இழிந்த பழி நேர்ந்த பின் இனி உயிரோடிருந்து வாழலாமா? என் இருப்பு மிகவும் அருவருப்புடையது. அரிய கீர்த்திமான்; அம்புத வீரன்; அதிசய மேகை; அத்தகைய உத்தமனை இரா. மனுக்கு உம்ற சமையத்தில் செய்ய வுரிய ஊழியத்தைச் செப் யத் தவறி விட்டுப் பித்தனப்ப் பிதற்றுகிறேன்; தேவியைக்