பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,623 கொன்று போன அந்தப் பாவியைக் கொன்று இலங்கையைப் பாழாக்கி அரக்கர் குலத்தை அழித்துச் சிதைத்து அதன் பின் ான் அழிந்து போலுைம் ஒருவாறு ஆறுதலாகும். அவ்வாறு செய்யாமல் இவ்வாறு அழுது நிற்பது பழுது, ஈண்டு நிகழ்ந்ததை ஆண்டவனிடம் அறிவியாமல் வேண்டியபடி செய்வது விணும் ஆதலால் அந்தப் புண்ணிய மூர்த்தியிடம் போவோம் என்று எண்ணித் துணிந்து கண்ணிர் பெருகிஒட அனுமான் எழுந்தான். இங்கே இவன் அழுது புலம்பிப் பதைத்துத் துடித்திருக்கும் துடிப்புகள் பரிதாப நிலைகளின் முடிவுகளாய் நெடிது ஓங்கியுள் ளன. பலபல கருதி நிலைகுலைந்து குலைகலங்கி அலமந்திருக்கிருன். தெய்வம் இல்லையோ? என்று கேம்பியது வெய்ய துயரத் தின் வேதனையால் விளைந்தது. தாய பதிவிரதையைத் தீய பாத கன் வாளால் வன் கொலை புரியத் தெய்வமும் பார்த்து கின்றதே! என் குலை துடிக்கிறதே! கடவுள் என்று ஒரு பொருள் இருக் கும் ஆனல் அதி பாதகமான இங்க அநீதி நடக்குமா? என கைந்து துடித்திருக்கிருன் ஆதலால் தெய்வத்தை நோக்கி இங்ங் னம் வெய்ய துயரோடு இடித்துப் பேச சேர்ந்தான். தெய்வம் எங்கும் உள்ளது. எல்லாம் வல்லது என்று நம்பி யிருந்தான்; ஆகவே இங்கு இக் கீமை நிகழவே அதனை கினைந்து, நொந்து கவித்தான். ஏழைபங்காளன் எனக் கடவுளுக்கு ஒரு பெயர் வேதத்தில் உள்ளது. அந்த அரிய பெயருக்கு உரியது. செய்யாமையால் அது பேகமாய் ஏகம் அடைய நேர்ந்தது என்று வேத நலத்தின் மேல் வேதனை விரிந்தது. பெரிய மேதை ஆதலால் வேதனையால் துடித்தபோது தெய்வ சிந்தனையில் உழந்து புலம்பினன். தன் உள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பதே அல்லல் நேர்ந்த போது சொல்லில் துள்ளி வெளி வருகிறது. ஒருவனுடைய அவலப் புலம்பல்கள் நேரே நேர்ந்து கின்றது கவலை நிலைகளைக் காட்டுவதோடு அவனது உண்மையான இயல்பையும் தெளிவா விளக்கி விடுகின்றன. தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம். கரும தேவதையை இகழ்ந்து இவ்வாறு மறுகி யிருக்கிருன். வையத்தில் தோன்றிய தெய்வத் திருமகள் எனச் சீதையை