பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 4627 ஆற்ருத துக்கம் பெரும் பாரமாப்ப் பெருகி உள்ளத்தை அழுத்தி உடைத்து விடும்' என ஷேக்ஸ்பீயர் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு மானச மருத்தை உரைத்திருக்கிரு.ர். வே சுபாவங்கள் யாண்டும் ஒரு படியாய் மேவி நிற்கின் றன. சுகம் வந்தால் உள்ளம் களிக்கின்றனர்; துக்கம் சேர்ந்தால் துடித்து வருந்துகின்றனர். களிப்பும் கவலையும் கலந்து வந்தன. சீதையை கினைந்து பரிந்து பதைக்க அனுமான் பின்பு அயோத்தியை எண்ணி அலமந்து துடித்தான். பரதன் முதலாயி னேரைக் கொல்லப் போவதாக மேகநாதன் வேகமாய்ச் சொல்லி விமானத்தில் போளுன் ஆதலால் அவனைத் தொடர்ந்து போப் விரைந்து கொன்று தொலைக்கவேண்டும் என்று கொதித்து எழுந்தான். உற்ற வேகன்களை யெல்லாம் அடக்கிக்கொண்டு உறுதி ஊக்கமாய் மேலே காவ விரைந்தான்; அங்கனம் விரைந்து செல்ல நேர்ந்தவன் உடனே வேறு கருதி மாறி கின்ருன். தொடர்ந்து செல்லின் இங்கு உற்ற தன்மை மன்னன் உணர்கிலன். அயோத்திக்கு விரைந்து போக முனைந்தவன் இவ்வாறு கினைந்து அடங்கியிருக்கிருன். அங்கே போய்விட்டால் இங்கே நிகழ்ந்த அழிவு கிலையை ஆண்டவன் அறிய முடியாகே! என்று நீண்ட துயரோடு கெஞ்சம் மறுகித் தனது போக்கை நீக்கி கின்ருன். இராமபிரான்சிடம் போப் இந்தப் பரிதாப நிலையை எ ப்படிச் சொல்வேன்? இதைக் கேட்டால் அந்த மூர்த்தி உயிர் கரித்திருக் குமா? தேவி மாண்டாள் என்னும் போதே ஆவி மாண்டுபோ குமே அந்த வீர வள்ளலுடைய உள்ளம் துடித்து உயிர் பதைத்துத் துயரடைந்து அழியும் பழிமொழியை என் வாயால் சொல்லுவதை விட நான் இங்கே செத்துப் போவதே நல்லது; அங்கே போப் ஆண்டவனேயும் கொன்று நானும் மாண்டு மடி வதினும் ஈண்டுத் தனியாப் இறந்து ஒழிவதே இனிதாம் என இன்னவாறு இன்னல் பல உழந்து எண்ணி கொந்தான். அஞ்சொலால் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்லத் துஞ்சிள்ை என்று சொல்லத் தோன்றினேன்.