பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 4,629 மறுகி வருவதை இராமபிரான் கண்டான்; தூர வரும்போதே சோக நிலையை ஒர்ந்து துணுக்கம் அடைந்தான்; வேகமாய் வந்தவன் யாதும் பேசாமல் அடியில் வீழ்ந்து கதறி அழுதான். மாருதி மறுகி வீழ்ந்தது. சிங்கஏறு அனய வீரன் செறிகழற் பாதம் சேர்ந்தான் அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கண் உற்ருன் பொங்கிய பொருமல் விங்கி உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப வெங்கணிர் அருவி சோர மால்வரை என்ன வீழ்ந்தான். (1) இராமன் பதறி வினவியது. வீழ்ந்தவன் தன்னே வீரன் விளைந்தது விளம்பு கென்னத் தாழ்ந்திரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கி லாதான் ஆழ்ந்தெழு துன்பத் தாளே அரக்கனின்று அயில்கொள்வாளால் போழ்ந்தனன் என்னக் கூறிப் புரண்டனன் பொருமு கின்ருன். படு துயராய் நின்றது. - துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைக்கிலன்; துள்ளிக்கண்ணிர் பொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன் றிலன் பொருமி யுள்ளம் வெடித்திலன்; விம்மிப் பாரில் வீழ்ந்திலன்; வியர்த்தான் அல்லன்; அடுத்துள துன்பம் யாவும் அறிந்திலர் அமர ரேயும். (3) வானரங்கள் விழுந்தது. சொற்பதம் கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர நற்பெரு வாடை யுற்ற மரங்களின் நடுக்கம் எய்தா கற்பகம் அனேய வள்ளல் கருங்கழற் கமலக் கால்மேல் வெற்பினம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம். (4) இராமன் சாய்ந்தது. சித்திர்த் தன்மை யுற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்; மித்திரர் வதனம் நோக்கான்; இளேயவன் வினவப் பேசான்; பித்தரும் இறைபொருத பேரபி மானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க உயிரிலன் என்னச் சாய்ந்தான். (5)

  • - o - * =

இலக்குவன் வீழ்ந்தது. நாயகன் தன்மை கண்டும் தமக்குற்ற நாணம் பார்த்தும் ஆயன கருமம் மீள அழிவுற்ற அதனேப் பார்த்தும்