பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,630 கம்பன் கலை நிலை வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் அயர்ந்து சாம்பித் தாயினே இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆன்ை. (6) (மாயா சிதைப் படலம் 56-61) இங்கே நிகழ்ந்துள்ள அவல நிலைகள் உலக உள்ளங்களுக்குக் கொடிய துயரங்களாய் நேர்ந்திருக்கின்றன. பரிதாபங்கள் சீவர்களைப் பதைக்கச் செப்கின்றன. துன்பத் துடிப்புகள் எல்லை மீறி ஏறி யுள்ளமையால் வாய் திறந்து பாதும் சொல்ல முடியாமல் அனுமான் ஆண்டவன் அடியில் விழுந்து அலறி அழுதான். அவனது துயரநிலை செயல்களில் நிகழ்ந்தது. அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கண் உற்ருன். என்ற கல்ை அவன் அடைந்துள்ள துயர நிலைகளை ஒருவாறு யூகமா உணர்ந்து கொள்கிருேம். உடல் நடுங்கி உள்ளம் பதறிக் கண்ணிர் வெள்ளம் பெருகி ஒட உயிர் துடித்துத் துயரோடு கீழே வீழ்ந்து புரண்டு உருண்டு விறிட்டு அழுதிருக்கிருன். மலை கலங்கினும் மனம் கலங்காத கீரன் இவ்வாறு குலை கலங்கி நிலைகுலைந்து தரையில்விழுந்து புரண்டு அழுவதை நோக்கி இராமன் துடித்துத் தழுவி எடுத்து 'கடந்தது என்ன? அதனை விரைந்து சொல்!” என வேகித்து வினவினன். அன்னையை அரக்கன் கொன்று தொலைத்தான்' என்று கூறி வேறே பாதும், உரையாடாமல் மாருதி மீண்டும் மறுகிக் குமிறினன். - அந்தச் சொல்லைக் கேட்டதும் இராமன் உயிர்நிலை குலைந்து யாதும் அசையாமல் எதும் பேசாமல் மயங்கி நின்ருன். விழித்த கண் விழித்தபடி சித்திரப் பாவைபோல் இவ் விக்ககன் அன்று கின்ற நிலை கொடிய சோகத்தின் முடிவு நிலையை கெடிதுகாட்டி கின்றது. எல்லை கடந்த துயரத்தை எல்லாரும் அறியச் சொல் லாமல் சொல்லி கின்ற அந்த விசித்திர நிலை மானச தத்துவத் தின் மருமமாய் மருவி வானமும் வையமும் மறுக கிமிர்ந்தது. துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைக்கிலன். என்றத ஞல் இராமன் கின்ற நிலையை நேரே தெரிந்து கொள்கிருேம். தன் நிலை யாவும் மறந்து உன்மத்தனப் உயிர் ஒய்ந்து கின்றுள் ளான். வரம்பு கடந்த சோகம் உயிரைச் சூறையாடியுள்ளமை யால் துயரத் துடிப்புகள் யாதும் தோன்ருமல் உடல் தம்பித்து