பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4646 கம்பன் கலை நிலை இக்கொண்ட வஞ்சன் வீசச் திசைமுகன் பாசம் தீண்ட விக்கொண்டு விழ யானே பரதனும் வெய்ய கூற்றைக் கடய்க்கொண்டு குத்துண்டு அன்ன்ை குலத்தொடும் கிலத்தன் ஆகல் போய்க்கண்டு கோடி யன்றே என்றனன் புழுங்கு கின்றன். (2) இந்தப் பாசுரங்களில் பதிந்துள்ள உணர்ச்சி நிலைகளை ஊன்றி உணர வேண்டும். இளைய பெருமாளுடைய மன நிலையும் மதி நலமும் சகோதர வாஞ்சையும் அதிசய நிலையில் இங்கே துதி கொண்டு மிளிர்கின்றன. மானச மருமங்கள் விசித்திர கதியில் வெளிவந்துள்ளன. அரிய நீர்மைகள் நேரே அறிய நேர்ந்தன. பரதன இந்திரசித்து கொன்று விடுவானே! என்று குலை துடித்து இராமன் பதைத்துப் புலம்பிய உரைகளைக் கேட்டதும் இலக்குவன் சகிக்க முடியாமல் வெறுத்திருக்கிருன். எல்லே மீறிய பாசத்தால் பெரிய அண்ணு தனது சின்ன அண்ண லுடைய அற்புத ஆற்றலை அறியமாட்டாமல் அவலம் உறுகின் ருரே! என்று கவலையோடு இந்த இளையவன் எதிர் பேசியிருப் பது அரிய பேராண்மையாய் ஒளி வீசி ஓங்கியுள்ளது. H "ஐயனே! என் அருமை அண்ணன் பரதனை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வில்லையே என்று என் உள்ளம் வருந்துகிறது. கொடியபாதகச் செயலை இங்கே செய்துவிட்டு.அயோத்தி மேல் போயுள்ள இந்திரசித்து அந்தச் சுந்தானே ஏதோ செய்து விடு வான் என்று தாங்கள் சிங்தை வருக்துவது எனக்கு விக்தையா கத் தோன்றுகின்றது. இந்த மேகநாதன் அங்கே சாக நேர்ந்தே போயிருக்கிருன்; தீய மாயாவியான இவைேடு மூன்று உலகங் களிலும் உள்ள அசுரர் அமரர் அரக்கர்கள் ஒருங்கே திரண்டு வந்தாலும் பரதன் எதிரே படுகாசமாய்ப் பட்டழிவர்; காகபா சத்தால் என்ன இங்கே கட்டி வீழ்த்தியதுபோல் என் அண் ணனை அங்கே யாதும் செய்ய முடியாது. அரக்கனுடைய விரப் பிரதாபங்கள் யாவும் அவன் எதிரே நிலைகுலைந்து ருேப் இழிந்து ஒழிந்துபோம். அரிய விரத சீலனை அவனிடம் பெரிய போர் வீரம் பெருகியிருப்பதை இதுவரை யாரும் அறியவில்லை ஆயி னும் நேரே போராடப் போயுள்ள இராவணன் மகன் விரைவில் அறிந்துகொள்வான்; அவன் ஈண்டு மீண்டு வரவே முடியாது: ஆண்டே மாண்டு மடிவான்; சேனைகள் போயிருந்தாலும்